![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/08/Acetic-acid-2D-skeletal.svg/langta-640px-Acetic-acid-2D-skeletal.svg.png&w=640&q=50)
அசிட்டிக் காடி
From Wikipedia, the free encyclopedia
அசிட்டிக் காடி (இலங்கை வழக்கு: அசற்றிக்கு அமிலம் - Acetic acid), CH3COOH என்னும் வேதியியல் வாய்பாடு கொண்ட, ஒரு கரிமக் காடி (organic acid). இது எத்தனாயிக் காடி அல்லது அசிட்டிக் அமிலம் என்றும் அழைக்கப்படும். இது கடல் நீரிலும், எண்ணெய்க் கிணறுதோண்டும் இடங்களில் காணப்படும் உவர்நீரிலும் (brine), மிகச்சிறிதளவு மழைநீரிலும், இம்மியப் பொருளாக நிலைத்திணை, உயிரினங்களின் உடலில் காணப்படும் நீர்மப்பொருளிலும் காணப்படுகின்றது. உயிரிகளின் உடலியக்கத்தில், இன்றியமையாத ஆற்றல் கடத்துமுறைகளில்(energy pathways) இது பயன்படுகின்றது [1]. அசிட்டிக் காடி நாவில் எரியும் உணர்வும், சுருக்கென்று மூக்கைத் துளைக்கும் கடுமையான நெடியும் கொண்ட நிறமற்ற ஒரு நீர்மம். மேற்குலக வாழ்க்கையில் பொதுவாக வீடுகளில் பயன்படும் வினிகர்(vinegar) எனப்படும் ஒருவகைப் புளிமத்தன்மை உடைய சாராயம் போன்ற பொருளின் புளிப்புத்தன்மைக்கும், கடுமையான நெடிக்கும், அதில் உள்ள இந்த அசிட்டிக் காடியே காரணம். பழம் அல்லது காய்கறிகளின் சாற்றைஇ நொதிக்க விட்டால் அதிலிருந்து பெறும் 2-10% அசிட்டிக் காடி கொண்ட நீர்மத்தை வினிகர் என்பர். நீரற்ற தூய அசிட்டிக் காடி (இதனை "கிளேசியல் அசிட்டிக் காடி" என்றும் அழைப்பர்) நிறமற்ற நீர்மம்; இது சுற்றுப்புறத்தில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து நீரை உறிஞ்சிக்கொள்ளும். அசிட்டிக் காடி 16.7 °C (62 °F) இல் நிறமற்றப் படிகமாக உறைந்து திண்மமாகும். இது மென்வலுவான காடி, அதாவது நீரில் குறைந்த அளவே பிரிவுற்றுக் கரைந்து காடித்தன்மை தரும் பொருள்.
| |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்s
Acetic acid அசிட்டிக் காடி | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
Ethanoic acid எத்தனோயிக் காடி | |||
வேறு பெயர்கள்
அசிட்டைல் ஐதராக்சைடு Acetyl hydroxide (AcOH), ஐதரசன் அசிட்டேட் Hydrogen acetate (HAc), எத்தில்லிக் காடி Ethylic acid, மெத்தேன்கார்பாக்சைலிக் காடி Methanecarboxylic acid | |||
இனங்காட்டிகள் | |||
64-19-7 ![]() | |||
ChemSpider | 171 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 176 | ||
| |||
பண்புகள் | |||
C2H4O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 60.05 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 1.049 g/cm3 (l) 1.266 g/cm3 (திண்மங்கள்) | ||
உருகுநிலை | 16.5 °C (61.7 °F; 289.6 K) | ||
கொதிநிலை | 118.1 °C (244.6 °F; 391.2 K) | ||
முழுக்க கலக்கவல்லது | |||
காடித்தன்மை எண் (pKa) | 4.76 at 25 °C | ||
பிசுக்குமை | 1.22 mPa·s at 25 °C | ||
கட்டமைப்பு | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.74 D (வளிமம்) | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | அரிக்கும் தன்மை (C) தீபற்றக்கூடியது (F) | ||
R-சொற்றொடர்கள் | R10, R35 | ||
S-சொற்றொடர்கள் | (S1/2), S23, S26, S45 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 43 °C | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
3310 மிகி/கிகி (mg/kg), வாய்வழி (எலி) | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
கார்பாக்சைலிக் காடிகள் தொடர்புடையவை |
பார்மிக் காடி புரோப்பியானிக் காடி | ||
தொடர்புடைய சேர்மங்கள் | அசிட்டாமைடு, எத்தில் அசிட்டேட், அசிட்டைல் குளோரைடு, அசிட்டிக் ஆனைதரைடு, அசிட்டோநைட்ரைல், அசெட்டால்டிஃகைடு, எத்தனால், தியோஅசிட்டிக் காடி | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
கார்பாக்சைலிக் காடி (carboxylic acid) என்னும் வகையான காடிகளைச் சேர்ந்த இது அவற்றில் மிகவும் எளிய ஒரு காடி. இது தொழிலகங்களில் பயன்படும் ஒரு முக்கியமான வேதிப்பொருள். பலவகையான சாராயமல்லா நீர்ம குடியுணவுகள் விற்கப்படும் கொள்கலன்கள் (புட்டிகள், பாட்டில்கள்) செய்வதில் பயன்படும் பாலியெத்திலீன் டெரெப்தாலேட் (polyethylene terephthalate) என்னும் பொருளைச் செய்ய இது பயன்படுகின்றது. வீடுகளில் படிவுகள், கறைகளை நீக்கப் பயன்படுகின்றது. விற்கப்படும் உணவுப்பொருள்களில் இது காடித்தன்மையைக் கட்டுப்படுத்தும் E260 என்னும் எண் கொண்ட ஓர் உணவு சேர்ப்பியாகப் பயன் படுகின்றது
உலகளவில் ஆண்டுதோறும் அசிட்டிக் காடி 6.5 மில்லியன் டன் படைக்கப்படுகின்றது. இதில் 1.5 மில்லியன் டன் மீள்பயன்பாட்டின் வழி உருவாக்கப் பெறுகின்றது. மீதமுள்ளது எரியெண்ணெய் வேதிப்பொருள் (பெட்ரோகெமிக்கல்) தொழில்வழியாகவும் பிற உயிர்வேதியியல் முறைகளின் வழியாகவும் படைக்கப்படுகின்றது. வினிகர் எனப்படும் நீர்த்த அசிட்டிக் காடியை இயற்கையான நொதிப்பின் வழி படைக்கப்படுகின்றது