அன்சு பேத்து
இயற்பியலாளர் / From Wikipedia, the free encyclopedia
அன்சு பேத்து (Hans Bethe, ஆன்சு பேத்தே) ஒரு செர்மானிய, அமெரிக்க அணுக்கருவியல் இயற்பியலாளர். இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1967ம் ஆண்டு வழங்கப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் அன்சு பேத்துHans Bethe, பிறப்பு ...
அன்சு பேத்து Hans Bethe | |
---|---|
பிறப்பு | அன்சு ஆல்பிரெக்து பேத்து (1906-07-02)சூலை 2, 1906 ஸ்திராஸ்பூர்க், செருமனி |
இறப்பு | மார்ச்சு 6, 2005(2005-03-06) (அகவை 98) இத்தாக்கா, நியூயார்க், அமெரிக்கா |
வாழிடம் | செருமனி ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | செருமன் அமெரிக்கர் |
துறை | அணுக்கருவியல் |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் | பிராங்க்புர்த் பல்கலைக்கழகம் மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஆர்னோல்ட் சொம்மர்ஃபெல்டு |
அறியப்படுவது |
|
விருதுகள் |
|
துணைவர் | ரோசு எவால்டு (துரு. 1939; இரண்டு பிள்ளைகள்) |
கையொப்பம் |
மூடு
ஆன்சு பேத்தே தனது பணிக்காலத்தின் பெரும்பகுதியை பேராசிர்யராக கோர்னெல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.[2] இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் முதலாவது அணுக்கரு ஆயுதங்கள் தயாரித்த லாசு அலாமோசு ஆய்வுகூடத்தின் கோட்பாட்டுப் பகுதிக்குத் தலைவராக விளங்கினார். அங்கு அவர் ஆயுதங்களின் உய்நிலைப் பொருண்மையை அளவிடும் பணியில் பெரும் பங்கு வகித்தார். அத்துடன், 1945 இல் நாகசாக்கியில் வீசப்பட்ட "ஃபாட் மேன்" ஆயுதம், டிரினிட்டி (அணுகுண்டு சோதனை) ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட திடீர் அழுத்த வீழ்ச்சி முறையை உருவாக்கப் பிஉன்னணியில் இருந்த கோட்பாடுகளை உருவாக்குவதிலும் இவர் முன்னிறுழைத்தார்.[3]