அபிதோஸ்
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் / From Wikipedia, the free encyclopedia
அபிதோஸ் (Abydos (அரபு மொழி: أبيدوس) பண்டைய எகிப்தின் மேல் எகிப்து பிரதேசத்தில் பாயும் நைல் நதியின் மேற்கே 11 மைல் தொலைவில், தற்கால எகிப்தின் சோபாக் ஆளுநகரத்தில் உள்ள எல்-பால்யானா நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பண்டைய எகிப்திய நகரம் ஆகும்.[1] இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது அபிதோஸ் வம்ச பார்வோன்கள் மேல் எகிப்து மற்றும் நடு எகிப்து பகுதிகளை கிமு 1650 முதல் கிமு 1600 முடிய 50 ஆண்டுகள் ஆண்டனர்.
அபிதோஸ் நகரம் أبيدوس | |
---|---|
அபிதோஸ் நகரத்தில் பார்வோன் முதலாம் சேத்தியின் கோயில் முகப்பு | |
மாற்றுப் பெயர் | Ⲉⲃⲱⲧ; Abdju |
இருப்பிடம் | எல்-பால்யானா, சோபாக் ஆளுநகரம், எகிப்து |
பகுதி | மேல் எகிப்து |
வகை | குடியிருப்பு |
வரலாறு | |
காலம் | எகிப்தின் முதல் வம்சம் முதல் முப்பதாம் வம்சம் வரை |
பண்டைய அபிதோஸ் நகரத்தில் எகிப்திய பார்வோன்கள் மற்றும் பண்டைய எகிப்திய கடவுள்களின் கோயில்கள், கலலறைகள் மற்றும் பிரமிடுகள் நிறைந்திருப்பதால், இந்நகரத்தை எகிப்தின் முக்கியத் தொல்லியற்களமாகவும், புனித நகரமாகவும் கருதப்படுகிறது.[2]இப்பண்டைய நகரத்தைச் சுற்றிலும் தற்போது புதிய குடியிருப்புகள் தோன்றியதால், அபிதோஸ் நகரத்தின் தொல்பொருட்கள் சிதிலமடைந்து, பாழ்பட்டுள்ளது.[3]
பார்வோன் முதலாம் சேத்தியின் கல்லறைக் கோயில், அபிதோஸ் நகரத்தில் உள்ளது. இப்புகழ்பெற்ற கோயில் சுவரில் மூன்று வரிசைக் குறுங்கல்வெட்டுகளில் எகிப்திய மன்னர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளது.[4][5]
இதுவரை அறியப்படாத அபிதோஸ் வம்ச பார்வோன் செனப்காயின் மம்மி 2014-இல் பண்டைய அபிதோஸ் நகர அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. [6]
இந்த பண்டைய நகரத்தில் எண்ணிலடங்கா பழங்கால கல்லறைகள் மற்றும் கோயில்கள் உள்ளது. எகிப்தில் காணப்படும் தொல்பொருள் தளங்களில் மிகவும் முக்கியமானதாகும். நைல் நதிக்கு மேற்கே அமைந்துள்ளது அபிதோஸ் நகரம். எகிப்தின் துவக்க கால அரசமரபினர் காலத்தில் அபிதோஸ் நகரம் முக்கிய நகரமாகவும், எகிப்தியக் கடவுள் ஒசிரிசு வழிபாட்டிற்கான யாத்திரை மையமாகவும் இருந்தது. ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய அபிதோஸ் நகரம் பிற்காலத்தில் புகழ் மங்கி, பாலைவன மணலால் மூடப்பட்டது.