ஆண்டி முசியெட்டி
From Wikipedia, the free encyclopedia
ஆண்ட்ரேசு முசியெட்டி (ஆங்கில மொழி: Andrés Muschietti)[1] (பிறப்பு: 26 ஆகத்து 1973) என்பவர் அர்கெந்தீனா நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் திரைக்கதை எழுத்தாளர் நீல் கிராசு மற்றும் இவரது சகோதரி தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் பார்பரா முசியெட்டி ஆகியோருடன் இணைந்து 2013 ஆம் ஆண்டு வெளியான 'மம்மா'[2][3][4] என்ற திரைப்படத்தில் பணியாற்றியதன் மூலம் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார். இந்த படம் இதே பெயரில் இவர்களின் மூன்று நிமிட திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டடு உருவாக்கப்பட்டது. இவர் 39 வயதில் தயாரித்த இந்தப் படம், அப்போதைய நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றிய கில்லர்மோ டெல் டோரோவின் கவனத்தை இவர் மீது ஈர்த்தது.
பிறப்பு | ஆண்ட்ரேசு முசியெட்டி 26 ஆகத்து 1973 (1973-08-26) (அகவை 50) விசென்டே லோபஸ், பியூனஸ் அயர்சு, அர்கெந்தீனா |
---|---|
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1995–இன்று வரை |
உறவினர்கள் | பார்பரா முசியெட்டி (சகோதரி) |
இதை தொடர்ந்து இவர் ஈட் திரைப்படத் தொடரில் இரண்டு படங்களையும் இயக்கியதற்கான அங்கீகாரத்தைப் பெற்றார். இவரது முதலாவது படம் ஸ்டீபன் கிங் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு வெளியானது. இது எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த திகில் படமாக மாறியது.[5] மற்றும் இதன் தொடர்ச்சி யான இரண்டாவது படம் 'ஈட்: சாப்டர் 2' என்ற பெயறில் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இந்த இரண்டு திரைப்படமும் நியூ லைன் சினிமாவால் தயாரிக்கப்பட்டு, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்டது. அத்துடன் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத் திரைப்படமான தி பிளாஷ்[6] என்ற படத்தை எசுரா மில்லர் நடிப்பில் இயக்கியுள்ளார்.[7][8]