உலூனா 25
From Wikipedia, the free encyclopedia
உலூனா 25 (Luna 25, Luna-Glob lander, நிலாக் கோளகத் தரையிறங்கி) என்பது உருசிய நடுவண் விண்வெளி நிறுவனம் திட்டமிட்ட நிலாத் தரையிறங்கித் திட்டப் பணி ஆகும்.[7] இது நிலாவின் தென் முனைக்கு அருகே போகுசுலாவ்சுகி பள்ளத்தில் தரையிறங்கும்.[2] 1970 களில் இருந்து சோவியத் உலூனா திட்டத்தின் தொடர்ச்சியை வலியுறுத்துவதற்காக இது உலூனா - க்ளோப் லேண்டரில் இருந்து லூனா 25 என மறுபெயரிடப்பட்டது. இருப்பினும் இது ஒரு கட்டத்தில் லூனா - குளோப்நிலா ஆய்வு திட்டம் என்று கருதப்பட்ட பகுதியாகும்.
லூனா 25 நிலாத் தரையிறங்கி | |||||
திட்ட வகை | தொழினுட்பம், முன்னீட்டாய்வு | ||||
---|---|---|---|---|---|
இயக்குபவர் | SRI RAS (IKI RAN) | ||||
இணையதளம் | https://iki.cosmos.ru/missions/luna-25 | ||||
திட்டக் காலம் | 1 ஆண்டு (திட்டம்), நடப்பு: <0 நாட்கள் (திட்டம் தோல்வி)[1] | ||||
விண்கலத்தின் பண்புகள் | |||||
விண்கல வகை | தானியங்கித் தரையிறங்கி | ||||
தயாரிப்பு | லவோச்கின் | ||||
ஏவல் திணிவு | 1,750கிகி[2] | ||||
ஏற்புச்சுமை-நிறை | 30kg | ||||
திட்ட ஆரம்பம் | |||||
ஏவப்பட்ட நாள் | 11 ஆகத்து 2023, 23:10:57.189 ஒசநே[3][4] | ||||
ஏவுகலன் | சோயூசு-2.1b / பிரெகாத்[5] | ||||
ஏவலிடம் | வசுத்தோச்சினி விண்வெளி ஏவுதளம்[6] | ||||
நிலா தரையிறங்கி | |||||
தரையிறங்கிய நாள் | 21 ஆகத்து 2023 (திட்டம்), உண்மையில்: தொழில்நுட்பக் கோளாறினால் 2023 ஆகத்து 19, 11:57 ஒசநே மணிக்கு நிலாத் தரையில் மோதியது. | ||||
தரையிறங்கிய பகுதி | 69°32′42″ S 43°32′38.4″ E (பொகுசுலாவ்சுக்கி குழியின் வடக்கே (திட்டமிடப்பட்டது) | ||||
----
|
உலூனா 25 விண்கலம் 2023 ஆகத்து 10, 23:10 ஒசநே மணிக்கு, சோயூசு-2.1பி ஏவுகலன் மூலம் உருசியாவின் அமூரில் உள்ள வசுத்தோச்சினி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.[3]
உலூனா-25 நிலாவின் தென்முன்னையில் ஆகத்து 23 அன்று மென்மையாகத் தரையிறங்க இருந்தது. ஆனால், அது நடப்பதற்கு முன்பாக வட்டணையில் நகர்ந்துகொண்டிருந்த விண்கலம் தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொண்டதை அடுத்து, 2023 ஆகத்து 19, 11:57 மணிக்கு கட்டுப்பாடற்ற வட்டணையில் சுற்றிவந்து நிலாவில் விழுந்தது.[8][9][10]