எசுத்தோனியா
From Wikipedia, the free encyclopedia
எஸ்தோனியா /ɛˈstoʊniə/ (கேட்கⓘ)[1][2] (எசுத்தோனிய மொழி: Eesti)வார்ப்புரு:Need IPA, உத்தியோகபூர்வமாக எஸ்தோனியக் குடியரசு என்பது (எசுத்தோனிய மொழி: Eesti Vabariik), வட ஐரோப்பாவின் பால்டிக் பகுதியிலுள்ள நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே பின்லாந்தும், மேற்கே பால்டிக் கடலும், தெற்கே லத்வியாவும் (343 km), கிழக்கே பெய்பசு ஏரியும் ரசியாவும் (338.6 km) அமைந்துள்ளன.[3] பால்டிக் கடலுக்கு அப்பால் சுவீடன் மேற்கிலும், பின்லாந்து வடக்கிலும் அமைந்துள்ளன. எஸ்தோனிய நிலப்பரப்பு 45,227 km2 (17,462 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளதோடு, ஈரப்பதனுடன் கூடிய கண்டக் காலநிலையைக் கொண்டுள்ளது. எஸ்தோனியர் ஃபின்னிய மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தோராவர். மேலும் இவர்களது மொழியான எஸ்தோனிய மொழி ஃபினோ-உக்ரிக் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மொழி ஃபின்னிய மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. மேலும் அங்கேரிய மொழியும் சாமி மொழியும் இம்மொழியுடன் சிறிய தொடர்புடையன.
எசுத்தோனியக் குடியரசு Eesti Vabariik | |
---|---|
நாட்டுப்பண்: Mu isamaa, mu õnn ja rõõm | |
தலைநகரம் | தாலின் |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | எசுத்தோனியம் |
அரசாங்கம் | பாராளுமன்றக் குடியரசு |
• குடியரசுத் தலைவர் | டோமஸ் ஹென்டிரிக் இல்வெஸ் |
• பிரதமர் | கஜா கல்லாஸ் |
விடுதலை | |
• கூற்றம் | பெப்ரவரி 24, 1918 |
• திட்டப்பட்டது | பெப்ரவரி 2, 1920 |
ஜூன் 16, 1940 | |
• மீண்டும் கூற்றம் | ஆகஸ்டு 20, 1991 |
பரப்பு | |
• மொத்தம் | 45,226 km2 (17,462 sq mi) (132வது) |
• நீர் (%) | 4.56% |
மக்கள் தொகை | |
• 2006 மதிப்பிடு | 1,324,333 (151வது) |
• 2000 கணக்கெடுப்பு | 1,376,743 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $23.93 பில்லியன் (106வது) |
• தலைவிகிதம் | $18,216 (42வது) |
ஜினி (2003) | 35.8 மத்திமம் |
மமேசு (2004) | 0.858 Error: Invalid HDI value · 40வது |
நாணயம் | யூரோ (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (கி.ஐ.நே) |
ஒ.அ.நே+3 (கி.ஐ.கோ.நே) | |
அழைப்புக்குறி | 372 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | EE |
இணையக் குறி | .ee1 |
|
எஸ்தோனியா சனநாயகப் பாராளுமன்றக் குடியரசாகும். இது பதினைந்து பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரமும் பெரிய நகரமும் தலினின் ஆகும். எஸ்தோனியா 1.3 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம், ஐரோவலயம் மற்றும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமையம் ஆகிய உறுப்பு நாடுகளில் மிகவும் குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. முன்னேறிய உயர் வருவாய்ப் பொருளாதாரம் கொண்ட அபிவிருத்தியடைந்த நாடான எஸ்தோனியா முன்னைய சோவியத் குடியரசுகளிலேயே உயர் நபர்வீத மொத்த உள்ளூர் உற்பத்தியைக் கொண்டுள்ளது.[4] மேலும், பொருளாதார ஒத்துழைப்புக்கும், அபிவிருத்திக்குமான ஒன்றியத்தின் அங்கத்தினராகவும் உள்ளது.
மனிதவள அபிவிருத்திச் சுட்டெண்ணின்படி, எஸ்தோனியா உயர் நிலையிலுள்ளதோடு,[5] பத்திரிகைச் சுதந்திரம், (2012ல் உலகளவில் மூன்றாவது[6]), பொருளாதாரச் சுதந்திரம், தனிமனித உரிமைகள் மற்றும் கல்வி ஆகியவற்றிலும் சிறந்த நிலையிலுள்ளது. எஸ்தோனியா ஐரோப்பிய நாடுகளிலேயே சிறந்த இணையத்தள வசதி கொண்ட நாடாக உள்ளதோடு,[7][8] மின் அரசாங்க அமைப்பிலும் முன்னணியிலுள்ளது.[9]