ஒல்ஜைடு
From Wikipedia, the free encyclopedia
ஒல்ஜைடு[lower-alpha 1] என்பவர் ஈல்கானரசு அரசமரபின் எட்டாவது ஆட்சியாளர் ஆவார். இவர் 1304 முதல் 1316 வரை ஈரானின் தப்ரீசு நகரத்தில் இருந்து ஆட்சி புரிந்தார். "ஒல்ஜீட்" என்கிற இவரது பெயருக்கு "தெய்வ அருள் பெற்ற" என்று மங்கோலிய மொழியில் பொருள்.