குமைல் நஞ்சியானி
பாக்கித்தானிய நடிகர் / From Wikipedia, the free encyclopedia
குமைல் அலி நஞ்சியானி (ஆங்கில மொழி: Kumail Ali Nanjiani) (பிறப்பு: மே 2, 1978)[1] என்பவர் பாக்கித்தானிய நாட்டு நடிகர், நகைச்சுவையாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் எச்பிஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சிலிக்கான் வேலே' (2014–2019) என்ற நகைச்சுவைத் தொடரில் தினேஷ் என்ற பாத்திரத்திற்காகவும், 'தி பிக் சிக்' (2017)[2] என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் இணைந்து எழுதி நடித்ததற்காகவும் அறியப்படுகிறார். இந்த திரைப்படத்தில் இவரது மனைவி எமிலி வி.கோர்டனுடன்[3] இணைந்து எழுதியதற்காக, சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[4][5] இவரை 2018 ஆம் ஆண்டில் டைம் இதழ் உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக பட்டியலிட்டது.[6]
குமைல் நஞ்சியானி | |
---|---|
பிறப்பு | குமைல் அலி நஞ்சியானி மே 2, 1978 (1978-05-02) (அகவை 46) கராச்சி, சிந்து மாகாணம், பாக்கித்தான் |
குடியுரிமை | ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர், நகைச்சுவையாளர், திரைக்கதை எழுத்தாளர், வலையொலி |
செயற்பாட்டுக் காலம் | 2008–present |
வாழ்க்கைத் துணை | எமிலி வி. கார்டன் (தி. 2007) |
உறவினர்கள் | ஷெரீன் நஞ்சியானி (உறவினர்) |
2021 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான எட்டெர்னல்சு என்ற படத்தில் 'கிங்கோ' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[7]