கெந்திங் மலை
From Wikipedia, the free encyclopedia
கெந்திங் மலை (மலாய் மொழி: Tanah Tinggi Genting; ஆங்கிலம்: Genting Highlands) என்பது மலேசியாவில் ஒரு மலை வாழிடமாகும். பகாங் - சிலாங்கூர் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில், தித்திவாங்சா மலைத் தொடரில் இந்த மலை வாழிடம் அமைந்து உள்ளது.[1] இங்கு குளிர்மையான தட்ப வெட்ப நிலை நிலவுகிறது.
கெந்திங் மலை | |
---|---|
Genting Highlands | |
கெந்திங் மலை | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,760 m (5,770 அடி) |
ஆள்கூறு | 3°25′25.00″N 101°47′36.00″E |
புவியியல் | |
அமைவிடம் | தீபகற்ப மலேசியா |
மூலத் தொடர் | தித்திவாங்சா மலைத்தொடர் |
ஏறுதல் | |
எளிய வழி | பத்தாங்காலியில் இருந்து காராக் நகருக்குச் செல்லும் வழி |
மலேசியாவில் மிக பிரசித்திப் பெற்ற ஒரு சுற்றுலாத் தளமும் இங்கு அமைந்து உள்ளது. ரிசோர்ட் வோல்ட் கெந்திங் (Resorts World Genting) என்று அழைக்கப் படுகிறது.[2] இந்தச் சுற்றுலாத் தளம், கெந்திங் குழுமத்திற்குச் சொந்தமானது.
கோலாலம்பூர் மாநகரில் இருந்து 54 கி.மீ. தொலைவில் இருக்கும் கெந்திங் மலையில், ஒரு தொங்கூர்திச் சேவையும் பயன்பாட்டில் உள்ளது. கெந்திங் மலையின் அடிவாரத்தில் இருந்து, இந்தச் சேவையைப் பயன்படுத்தி, மலை உச்சிக்குச் செல்லலாம். அதன் நீளம் 3.38 கி.மீ.
உலகிலேயே மிக வேகமாகச் செயல்படும் இந்தத் தொங்கூர்தியில், நவீனமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அத்துடன் தென் கிழக்கு ஆசியாவில் மிக நீளமான தொங்கூர்தியாகவும் விளங்குகிறது.[3]