சக்கர இயக்கம் (சுடுகலன்)
From Wikipedia, the free encyclopedia
சக்கர இயக்கம் (ஆங்கிலம்: wheellock, வீல்லாக்) என்பது சுடுகலனை சுடுவதற்கான தீப்பொறியை உண்டாக்கும், ஓர் சக்கரவுராய்வு இயங்குநுட்பம் ஆகும். இதுவே சுடுகலன் தொழில்நுட்பத்தில், திரி இயக்கத்திற்கு அடுத்து வந்த பெரிய மேம்பாடு. மேலும், தன்னிச்சையாக எரியூட்டிக்கொள்ளும் திறனுடைய முதல் சுடுகலனும் இதுவேயாகும். தீப்பொறியை உண்டாக்கும் சுத்தும் எஃகுச் சக்கரத்தால், இது இப்பெயரைப் பெற்றது. 1500-ல் உருவாக்கப்பட்ட இது, திரியியக்கிகளுடன் ஒரே களத்தில் பயன்படுத்தப்பட்டன. இதற்கு பின்னர், சொடுக்கொலி இயக்கம் (1540-கள்), சொடுக்குஞ்சேவல் (1560-கள்) மற்றும் தீக்கல்லியக்கி (தோராயமாக 1600) ஆகிய இயங்குநுட்பங்கள் அடுத்தடுத்து வந்தன.[1][2][3][4]