சந்திரசேகர மூர்த்தி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சைவ சமயத்தில் சந்திரசேகரர் எனப்படுபவர் சிவனின் மகேசுவர மூர்த்தங்களுள் ஒன்றாகும். சந்திரனைத் தலையிற் தரித்த கோலம் இதுவாகும். சொல்லிலக்கணம்சேகரன் என்பதற்குக் காப்பவன் என்ற பொருளும் வருகின்றது. முழுதுமாய்த் தேய்ந்துவிடாமல் சந்திரனைக் காத்து அருளியதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டது எனக்கொள்ளலாம். [சான்று தேவை] வேறு பெயர்கள்
தோற்றம்பிறை அணிந்திருக்கும் சிவபெருமானின் வடிவம். வகைகள்சந்திரசேகரர் வடிவம் மூன்று நிலைகளில் இருப்பதாக சுப்பிரபேத ஆகமம் கூறுகிறது.
உருவக் காரணம்சந்திரன் தட்ச குமாரிகள் இருபத்து ஏழு பேரை மணந்த போதிலும், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் பிரியமாய் இருந்தான். அதனால் கோபம் கொண்ட தட்சன் சந்திரனின் அழகு குறைந்து மங்கிப் போகச் சாபம் கொடுத்ததாக புராணங்களில் காணலாம். தன் சாபம் நீங்க ஈசனை வழிபட்டான் சந்திரன். அவனின் கலை முழுதும் தேய ஆரம்பித்தது. இன்னும் இரண்டு நாட்களில் முற்றிலும் காணாமல் போய்விடும் என்ற நிலைமை தோன்றிய போது இறைவனே அவன் மீது இரக்கங் கொண்டு அவனைக் காப்பாற்றுகிறார். மூன்றாம் பிறையன்று தேய்ந்திருந்த சந்திரனைச் சேகரம் செய்து தன் முடியில் சூடியதால், 'சந்திரசேகரர்' என்ற பெயர் பெற்றார் ஈசன். கோயில்கள்உசாத்துணை
|
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads