சார் பீரங்கி
From Wikipedia, the free encyclopedia
சார் பீரங்கி (Tsar Cannon, உருசியம்: Царь-пушка, Tsar'-pushka) அளவில் பெரியதும், 5.94 மீட்டர்கள் (19.5 அடி) நீளமுடையதுமான இந்த பீரங்கி கிரெம்லினில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது அன்ரே சோகோவ் என்பவரால் 1586 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் உருவாக்கப்பட்டது. இது போரில் பாவிக்கப்படாத, ஒரு சின்னமாகவுள்ளது. ஆயினும் இது ஒரே ஒரு முறை சுடப்பட்டது.[1] கின்னஸ் உலக சாதனைகள் இதனை உலகிலுள்ள பெரிய குழல் விட்டம் உடைய பீரங்கியாகப் பதிவு செய்துள்ளது.[2] இது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒன்றாகவும் உள்ளது.
விரைவான உண்மைகள் ஆள்கூறுகள், இடம் ...
Царь-пушка | |
சார் பீரங்கி | |
ஆள்கூறுகள் | 55°45′04″N 37°37′05″E |
---|---|
இடம் | மாஸ்கோ, ரஸ்யா |
வடிவமைப்பாளர் | அன்ரே சோகோவ் |
வகை | பீரங்கி |
கட்டுமானப் பொருள் | வெண்கலம் |
நீளம் | 5.94 மீட்டர்கள் (19.5 அடி) |
முடிவுற்ற நாள் | 1586 |
மூடு