செப்டம்பர் 15 (September 15) கிரிகோரியன் ஆண்டின் 258 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 259 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 107 நாட்கள் உள்ளன.
- 601 – அலீ, முதலாவது சியா இமாம் (இ. 661)
- 1254 – மார்க்கோ போலோ, இத்தாலிய வணிகர், நாடுகாண் பயணி (இ. 1324)
- 1819 – பிரான்சிஸ் நேப்பியர், சென்னை மாகாண ஆளுநர் (இ. 1898)
- 1857 – வில்லியம் டாஃப்ட், அமெரிக்காவின் 27வது அரசுத்தலைவர் (இ. 1930)
- 1857 – அன்னா வின்லாக், அமெரிக்க வானியலாளர் (இ. 1904)
- 1858 – சார்லஸ் தெ ஃபூக்கோ, பிரான்சிய மதகுரு (இ. 1916)
- 1860 – மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, மைசூர் திவான், பொறியியலாளர் (இ. 1962)
- 1876 – சரத்சந்திர சட்டோபாத்யாயா, வங்காள எழுத்தாளர் (இ. 1938)
- 1890 – அகதா கிறிஸ்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1976)
- 1891 – செண்பகராமன் பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்டப் போராளி (இ. 1934)
- 1893 – சௌந்தரபாண்டியன், இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 1953)
- 1909 – கா. ந. அண்ணாதுரை, தமிழ்நாட்டின் 7வது முதலமைச்சர் (இ. 1969)
- 1912 – ஆர். கே. கரஞ்சியா, இந்திய எழுத்தாளர், இதழாளர் (இ. 2008)
- 1916 – கம்பதாசன் கவிஞர், எழுத்தாளர், தமிழ் திரைப்பட பாடலாசிரியர் (1973)
- 1918 – அமுது, ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 2010)
- 1930 – பாட்சி ஓ’கானெல் செர்மன், அமெரிக்க வேதியியலாளர் (இ. 2008)
- 1938 – கொ. மா. கோதண்டம், தமிழறிஞர், எழுத்தாளர்
- 1939 – சுப்பிரமணியன் சுவாமி, இந்திய அரசியல்வாதி
- 1941 – எம். ஜோசப் மைக்கல் பெரேரா, இலங்கை அரசியல்வாதி
- 1948 – மண்டயம் வீரம்புடி சீனிவாசன், ஆத்திரேலிய உயிரியலாளர்
- 1952 – ரத்னஜீவன் ஹூல், இலங்கை மனித உரிமைச் செயற்பாட்டாளர், கல்வியாளர்
- 1954 – பி. வாசு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர்
- 1955 – அப்துல் காதிர், பாக்கித்தானியத் துடுப்பாளர் (இ. 2019)
- 1964 – இராபர்ட் பிகோ, சிலோவாக்கியாவின் 14வது பிரதமர்
- 1967 – ரம்யா கிருஷ்ணன், திரைப்பட நடிகை
- 1977 – சிமாமந்த நாகொசி அதிச்சி, நைஜீரிய புதின எழுத்தாளர்
- 1977 – டோம் ஹார்டி, ஆங்கிலேய நடிகர்
- 1984 – வேல்சு இளவரசர் ஹாரி
- 1989 – சாலோ அப்டெச்லாம், பெல்ஜிய-பிரான்சியக் குற்றவாளி
- 1992 – அதிபன் பாசுகரன், இந்திய சதுரங்க வீரர்
"Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.