திபெத்திய பீடபூமி
From Wikipedia, the free encyclopedia
திபெத்திய பீடபூமி (Tibetan Plateau) மேற்கு சீனாவின் கிங்ஹாய் மாகாணம், திபெத் தன்னாட்சிப் பகுதி, மற்றும் இந்தியாவின் லடாக் பகுதிகளை உள்ளடக்கியதாகும்.[1][2][3][4][5][6][7][8][9][10]
திபெத்திய பீடபூமி | |
---|---|
青藏高原, Qīngzàng Gāoyuán | |
தெற்கில் இமயமலையும், வடக்கில் தக்கிலமாக்கான் பாலைவனத்திற்கு இடையே அமைந்த திபெத்திய பீடபூமி. | |
பரிமாணங்கள் | |
நீளம் | 2,500 km (1,600 mi) |
அகலம் | 1,000 km (620 mi) |
பரப்பளவு | 2,500,000 km2 (970,000 sq mi) |
புவியியல் | |
அமைவிடம் | சீனா (திபெத் தன்னாட்சிப் பகுதி, கிங்ஹாய் மாகாணம், சீனா) இந்தியா (லடாக்) நேபாளம் வடக்கு |
தொடர் ஆள்கூறு | 33°N 88°E |
25,00,000 இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட திபெத்திய பீடபூமி, கிழக்கிலிருந்து மேற்காக 2,500 கிலோ மீட்டர் நீளமும், வடக்கிலிருந்து தெற்காக 1,000 கிலோ மீட்டர் அகலமும், 4,500 மீட்டர் உயரமும் கொண்டது.
இப்பீடபூமி 36,000 பனிபடர்ந்த கொடுமுடிகள் கொண்டது. தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் பாயும் ஆறுகளின் ஊற்றுக்கண்னாக திபெத்திய பீடபூமி விளங்குகிறது. சிந்து ஆறு, பிரம்மபுத்திரா ஆறு போன்ற எண்ணற்ற ஆறுகள் இப்பீடபூமியில் உற்பத்தியாகிறது.
உலகின் அதிக அளவில் பனிப்பாறைகள் கொண்ட பகுதிகளிலான தென் துருவம், வட துருவத்திற்கு அடுத்து மூன்றாம் இடத்தில் திபெத்திய பீடபூமி, உள்ளது.[11]}}
திபெத்திய பீடபூமியை உலகின் கூரை என்றும், உலகின் மூன்றாம் துருவம் என்றும் அழைப்பர். திபெத்திய பனி படர்ந்த கொடுமுடிகளிலிருந்து வற்றாத ஆறுகள் தோன்றி சீனா, நேபாளம், பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்காள தேசங்களில் பாய்கிறது.
புவி வெப்பம் அதிகரித்ததன் காரணத்தினால், திபெத்திய பீடபூமியில் ஏற்பட்ட புவியியல் மாறுதல்களினால், இப்பீடபூமி அறிவியல் ஆய்வலர்களின் ஆய்வில் உள்ளது.[12][13][14][15]