நக்காடா பண்பாடு
From Wikipedia, the free encyclopedia
நக்காடா பண்பாடு (Naqada culture) வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பண்டைய எகிப்தின் வெண்கலக் காலத்தில் ஏறத்தாழ கிமு 4400 முதல் கிமு 3000 முடிய இத்தொல்லியல் பண்பாடு விளங்கியது. தெற்கு எகிப்தில் அமைந்த நக்காடா எனும் பண்டைய நகரத்தின் பெயரால் இப்பண்பாட்டின் பெயர் அமைந்தது. 2013- ஆம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கரிம கதிரியக்க ஆய்வில், நக்காடா பண்பாடு கிமு 3,800-3,700 காலத்தியது என முடிவு செய்துள்ளனர். [1]
விரைவான உண்மைகள் நக்காடா பண்பாடு, புவியியல் பகுதி ...
நக்காடா பண்பாடு | |
---|---|
[[File:|264px|alt=]] | |
புவியியல் பகுதி | எகிப்து |
காலப்பகுதி | செப்புக் காலம் |
காலம் | ஏறத்தாழ கிமு 4,400 – 3,000 |
வகை களம் | நக்காடா தொல்லியல் களம் |
முந்தியது | பதாரியப் பண்பாடு |
பிந்தியது | எகிப்தின் துவக்க கால அரச மரபுகள் |
மூடு
நக்காடா பண்பாட்டின் இறுதியில், துவக்க வெண்கலக் காலத்தில் விளங்கிய மூன்றாவது நக்காடா பண்பாட்டுக் காலத்தின் போது, துவக்க கால எகிப்திய அரசமரபினர் கிமு 3,150 முதல் கிமு 2,686 முடிய தெற்கு எகிப்தையும், வடக்கு எகிப்தையும் ஒன்றிணைத்து ஆண்டனர்.