![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/23/Neena.V_%2528cropped%2529.jpg/640px-Neena.V_%2528cropped%2529.jpg&w=640&q=50)
நீனா வரகில்
ஓர் இந்திய தடகள விளையாட்டு வீரர் / From Wikipedia, the free encyclopedia
நீனா வரகில் (Neena Varakil) என்பவர் ஓர் இந்திய தடகள விளையாட்டு விரராவார். இவ்வீராங்கனை நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்று விளையாடுவார். 1991 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் நாள் இவர் பிறந்தார். 2016 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் பெங்களுரில் நடைபெற்ற போட்டியில் இவர் 6.6 மீட்டர் நீளம் தாண்டி வெற்றி பெற்றார். இதுவே நீனா வரகிலின் தனிப்பட்ட சாதனையாகும்[1].
விரைவான உண்மைகள் தனிநபர் தகவல், தேசியம் ...
![]() 2017 | |||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியன் | ||||||||||
பிறப்பு | 2 மே 1991 (1991-05-02) (அகவை 33)[1] மெப்பாயூர், கோழிக்கோடு | ||||||||||
உயரம் | 1.70 மீ[2] | ||||||||||
எடை | 52 கி.கி | ||||||||||
விளையாட்டு | |||||||||||
நாடு | இந்தியா | ||||||||||
விளையாட்டு | தடகள விளையாட்டு | ||||||||||
நிகழ்வு(கள்) | நீளம் தாண்டுதல் | ||||||||||
சாதனைகளும் விருதுகளும் | |||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | 6.66மீ, பெங்களுரு (11/7/2016) | ||||||||||
பதக்கத் தகவல்கள்
| |||||||||||
27 August 2018 இற்றைப்படுத்தியது. |
மூடு
சீனாவின் இயாசிங் நகரில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிராண்டு பிரிக்சு தடகள சந்திப்புப் போட்டியில் நீனா 6.37 மீட்டர் நீளத்தைத் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்[3].
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன் பட்டப் போட்டியில் நீனா வெள்ளிப் பதக்கமும், ஒரே நாட்டைச் சேர்ந்த நயானா இயேம்சு வெண்கலப் பதக்கமும் பெற்றனர்[4].