நைலான் 66
நைலான் பலபடி மற்றும் செயற்கை இழை / From Wikipedia, the free encyclopedia
நைலான் 66 (Nylon 66, நைலான் 6-6, நைலான் 6/6, அல்லது நைலான் 6,6) என்பது ஒரு வகையான பாலியமைடு ஆகும். நைலான்கள் பல வகைகளில் காணப்பட்டாலும், துணி மற்றும் நெகிழித் துறைகளில் பயன்படும் இரண்டு வகை நைலான்களில் நைலான் 6 மற்றும் நைலான் 66 ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படுபவை ஆகும். நைலான் 6,6 1935 பெப்பிரவரி 28 இல் வாலசு கரோத்தர்சு என்னும் அமெரிக்க வேதியியலாளரால் உருவாக்கப்பட்டது.[1][2] இது எக்சாமெதிலீன் டை அமீன் மற்றும் அடிபிக் அமிலம் ஆகிய இரண்டு மூலக்கூறுகள் சோ்ந்த சோ்மம் ஆகும். இந்த இரண்டு மூலக்கூறுகளுமே தங்களில் 6 கார்பன் அணுக்களைக் கொண்டவை. இதன் காரணமாகவே இந்த நைலான் வகையானது, நைலான் 6,6 என அழைக்கப்படுகிறது.[3]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பாலி[இமினோல்(1,6-டையாக்சோயெக்சாமெத்திலீன்) இமினோயெக்சாமெத்திலீன்] | |
வேறு பெயர்கள்
பாலி(எக்சாமெத்திலீன் அடிப்பமைடு), பாலி (என்,என்'-எக்சாமெத்திலீன் அடிப்பீன்டையமைடு), மரனைல், அல்ட்ராமிட், சைட்டைல், அக்ரோமிட், டியூரெதான், பிரையனைல், வைடைன் | |
இனங்காட்டிகள் | |
32131-17-2 | |
ChemSpider | none |
பப்கெம் | 3032893 |
பண்புகள் | |
(C12H22N2O2)n | |
அடர்த்தி | 1.314 கி/மில்லி (சைட்டெல்) |
உருகுநிலை | 507 °F (264 °C) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு