படிநிலை இயக்கி அல்லது படிநிலை மின்னோடி (stepper motor, step motor, அல்லது stepping motor, ஸ்டெப்பர் மோட்டார்) என்பது துரியற்ற நேரோட்ட மின்சாரஇயக்கி ஆகும், இது இயக்கியின் ஒரு முழு சுழற்சியை பல சமநிலை படிகளாகப் பிரிக்கிறது. இயக்கியானது பயன்பாட்டின் தேவைக்கேற்ற வேகம், முடுக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்வுசெய்யும்பொழுது எவ்வித பின்னூட்ட உணரி எதுவுமின்றி (திறந்த சுற்றுக் கட்டுப்பாடு) நகர்த்த கட்டளையிடப்படுகிறது.[1]