பாலூட்டி இனம் From Wikipedia, the free encyclopedia
பம்பாசு மான் (Pampas deer) என்பது தென் அமெரிக்காவின் புல்வெளிகள் உள்ள பகுதிகளில் வாழும் ஒரு வகை மான் ஆகும். [3] இவை போர்த்துக்கேய மொழியில் வேடோ-கம்பீரோ என்றும் எசுபானிய மொழியில் வெனாடோ அல்லது காமா என்றும் அழைக்கப்படுகின்றன. இது ஓசோடோசெரோஸ் பேரினத்தில் உள்ள ஒரே இனமாகும்.
பம்பாசு மான் | |
---|---|
செரா டா கனஸ்ட்ரா தேசிய பூங்காவில் ஆண் பாம்பாசு மான் | |
பிரேசிலில் உள்ள பான்டனாலில் குட்டிக்கு பாலூட்டும் பெண் பாம்பாசு மான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | செர்விடே |
பேரினம்: | ஓசோடோசெரோசு அமெகினோ, 1891 |
இனம்: | ஓ. பெசோராடிகசு |
இருசொற் பெயரீடு | |
ஓசோடோசெரோசு பெசோராடிகசு (லின்னேயஸ், 1758) | |
வேறு பெயர்கள் | |
செர்வசு பெசோராடிகசு லின்னேயஸ், 1758 |
பாம்பசு என்னும் நீண்ட புற்களுக்கிடையே வாழ்வதால் இந்த மானிற்கு இப்பெயர் ஏற்பட்டது. இவற்றின் வாழிடம் நீர் மற்றும் மலைகளை உள்ளடக்கியதான, பெரும்பாலும் குளிர்காலத்தில் வறட்சியைத் தாங்கக்கூடிய, மான்களை மறைக்குமளவு உயரமான புற்கள் கொண்ட பகுதி ஆகும். [4] இவற்றில் பல பாண்டனல் சதுப்பு நிலங்களில் வாழ்கின்றன. அங்கு தொடர்ந்து பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் மனித செயல்பாடுகள் அசல் நிலப்பரப்பின் பெரும்பகுதியை மாற்றியுள்ளது. [5] பாம்பஸ் புற்களை அழித்து விளை நிலங்களை ஏற்படுத்துவதால் இவை காடுகளுக்குள் சென்றுவிட்டன.
இவற்றின் ஆயுட் காலம் காடுகளில் சுமார் 12 ஆண்டுகள் வரை ஆகும். வளக்கப்படும் இடங்களில் நீண்ட காலம் வாழ்கின்றன. இவை அதிகப்படியாக வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு போன்றவை காரணமாக அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. [6] பாம்பஸ் புற்களே இவற்றின் முக்கிய உணவாகும். இவை வாழும் இடங்கள் வேளாண் நிலங்களாகபட்டிவிட்டதால் உணவிற்காக இவை பயிற்களை மேய்கின்றன. என வே இவை அதிக அளவு வேட்டையாடப்படுகின்றன. எனவே இவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இவற்றின் இழப்பு குறித்து பலர் கவலைப்படுகிறார்கள். ஏனென்றால் ஆரோக்கியமான மான்களின் எண்ணிக்கை என்பது ஆரோக்கியமான புல்வெளி என்று பொருள்படும். மேலும் ஆரோக்கியமான புல்வெளியானது பல உயிரினங்களின் தாயகமாகும். இது சிலரால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. பல வட அமெரிக்க பறவைகள் தெற்கே உள்ள இந்த பகுதிகளுக்கு வலசை வருகின்றன. மேலும் பாம்பாஸ் மான்கள் அதன் வாழ்விடத்தை இழந்தால், இந்த பறவை இனங்களும் குறைந்துவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். [7] மொத்தம் சுமார் 80,000 பாம்பாஸ் மான்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை பிரேசிலில் வாழ்கின்றன. [8]
பனாமாவின் பூச்சந்தி உருவானதைத் தொடர்ந்து, சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அமெரிக்கன் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக புதிய உலக மான்கள் வட அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவிற்குச் சென்றதாக புதைபடிவ பதிவுகள் குறிப்பிடுகின்றன. அவை விரைவாக பல்வேறு இனங்களாக பரிணாம வளர்ச்சியடைந்தன. அவற்றில் ஒரு சில மட்டுமே இன்று எஞ்சியிருக்கின்றன. பெரிய கண்ட பனிப்பாறைகள் மற்றும் பனிப்பாறைகள் இல்லாத பகுதிகளில் அதிக மண் அமிலத்தன்மை காரணமாக, புதைபடிவ பதிவின் பெரும்பகுதி அழிபட்டுள்ளன. எனவே இந்த ஆரம்பகால புதிய உலக மான்கள் எப்படி இருந்தன என்பதற்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை. புதைபடிவ பதிவுகள் தெளிவான வேறுபாட்டுடன் தொடங்குகின்றன. பாம்பாஸ் மான்கள் சமவெளி வாசிகளாக உருவாயின. அவற்றின் நேரடி மூதாதையர் முதலில் பிலிசுடோசி காலத்தில் தோன்றின. [9][10]
பாம்பாஸ் மான் இரண்டு இணைந்த குரோமோசோம்களைக் கொண்ட பிளாசுடோசெரசு பேரினத்துடன் தொடர்புடைய சதுப்பு மான்களுடன் ஒத்த மரபணு வடிவத்தைக் கொண்டுள்ளது.[3]
இவற்றில் ஐந்து அங்கீகரிக்கப்பட்ட துணையினங்கள் உள்ளன:[11]
பாம்பாசு மான் மரபணு ரீதியாக பலவுருத்தோற்றமுள்ள பாலூட்டிகளில் ஒன்றாகும்.[9]
பாம்பாஸ் மான்கள் பழுப்பு நிற உரோமங்களைக் கொண்டுள்ளன. இந்த மானினம் மெலிந்த உடலும், நீண்ட கால்களும் கொண்டவை. இவற்றின் உடல் நிறம் பருவங்களுக்கு ஏற்ப மாறுவதில்லை. இவற்றின் உதடுகளுக்கு மேல் வெள்ளைப் புள்ளிகளும், தொண்டையில் வெள்ளைத் திட்டுகளும் இருக்கும். [3] இவற்றில் பெண் மான்களின் உயரம் தோல்பட்டை வரை 60-65 செமீ (24-26 அங்குலம்) ஆகவும், ஆண் மான்களுக்கு 65-70 செமீ (26-28 அங்குலம்) உயரம் வரை இருக்கும். [12] இவற்றின் வால்கள் குட்டையாகவும் மயிற்கற்றை நிறைந்ததாகவும், 10 செமீ முதல் 15 வரை செ.மீ. வரை நீளமானதாக இருக்கும். ஓடும்போது, வெள்ளை வால் மான்களைப் போல, தங்கள் வாலைத் தூக்கியபடி ஓடுகின்றன. [3]
வயது வந்த ஆண் மான்களின் எடை பொதுவாக 24–34 கிலோவரை இருக்கும், ஆனால் 40 கிலோ வரை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பெண் மான்கள் பொதுவாக 22–29 கிலோ எடையுள்ளதாக இருக்கும்.[12] இவை சிறிய வகை மான்களாகும். ஒப்பீட்டளவில் சிறிய அளவு பால் ஈருருமை கொண்டவை. ஆண் மான்களுக்கு சிறிய கொம்புகள் உள்ளன. நடுத்தண்டில் மூன்று அல்லது நான்கு கிளைகள் தோன்றுகின்றன. கொம்புகள் ஆகத்து அல்லது செப்டம்பரில் ஆண்டுதோறும் உதிர்ந்து திசம்பரில் புதிதாக வளர்கின்றன. [3] [13] ஆண் மானின் கால்களில் சுரப்பிகள் உள்ளன. வெள்ளைப் பூண்டின் நாற்றமுடைய இச்சுரப்பிகளின் நெடியினைச் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு உணர முடியும். [4] மற்ற சிறிய ருமினன்ட்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண் மான்களுக்கு அவற்றின் உடல் அளவோடு ஒப்பிடும்போது சிறிய விரைகள் உள்ளன. [14]
அர்ஜென்டினாவில், இனச்சேர்க்கை காலம் திசம்பர் முதல் பெப்ரவரி வரை. உருகுவேயில், இனச்சேர்க்கை காலம் பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை ஆகும். [15] ஆண் காதலை வெளிப்படுத்த பல வழிகளைக் கையாள்கிறது. மெல்லிய ஒலி எழுப்புதல், பெண் மானை மூக்கால் தேய்த்தல், நாக்கால் அதன் மீது வருடுதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றன. மேலும் பெண் மானின் அருகிலேயே இருந்து, அதன் சிறுநீரை மணத்தை நுகர்ந்தபடி வெகுநேரம் அதனைப் பின்தொடரும். சில நேரங்களில் பெண் மான் தரையில் படுத்துக் கொள்வதன் மூலம் ஆண் மானுக்கு இசைவு தெரிவிக்கிறது. [3] பொதுவாக ஆண் மான்கள் குட்டிகளைப் பாதுகாப்பதற்கு பெண் மான்களுக்கு உதவுவதில்லை. இனச்சேர்க்கை முடிந்தவுடன் ஆண்மான்கள் ஓடிவிடும். ஆனால் பாம்பஸா மானினத்தில் பிறந்த குட்டிகளை பாதுகாக்க ஆண்மான்கள் பெண்மான்களுக்கு துணையாக நிற்கின்றன.
இவை வழக்கமாக பகலில் தவறாமல் மேய்கின்றன. ஆனால் சில சமயங்களில் இரவு நேரங்களிலும் செயல்படுகின்றன. [4] பாம்பாஸ் மான்கள் மிகவும் ஆர்வமுள்ளவைவையாகவும், ஆராய விரும்புகின்றனவாகவும் உள்ளன. இது பார்வையாளர்களுக்கு ஏற்றது என்றாலும், மனிதர்களைக் கண்டு அஞ்சி ஓடாததால், வேட்டைக்காகர்கள் இவற்றை எளிதில் கொன்றுவிடுகின்றனர். [3]
பாம்பாஸ் மான்கள் புதியதாக செழித்து பசுந் தாவரங்கள், புதர்கள், செடிகளை உண்பதைக் காணலாம். இவை உட்கொள்ளும் பெரும்பாலான தாவரங்கள் ஈர நிலத்தில் வளரக்கூடியவை. பம்பாஸ் மான்கள் உணவுக்காக கால்நடைகளின் உணவுடன் போட்டியிடுகின்றனவா என்பதை அறிய, அவற்றின் சாணம் ஆய்வு செய்யப்பட்டு, கால்நடைகளின் சாணத்துடன் ஒப்பிடப்பட்டது. இவை இரண்டின் உணவிலும் ஒற்றுமை உள்ளன. ஆனால் வெவ்வேறு விகிதங்களில் உட்கொள்கின்றன. பம்பாஸ் மான்கள் குறைந்த அளவு புல்லையும், அதிக அளவு போர்ப்ஸ் (மென்மையான தண்டுகளுடன் கூடிய பரந்த இலைகள் கொண்ட செடி) மற்றும் இளந்தளிர் உணவுகள் (தளிர்கள், இலைகள் மற்றும் கிளைகள்) போன்றவற்றை உண்கின்றன. மழைக்காலத்தில், இவற்றின் உணவில் 20% புதியதாக வளர்ந்த புற்கள் காணப்படுகின்றன. இவை குறிப்பாக பூக்கும் தாவரங்கள் கிடைக்கும் இடத்தை நோக்கி நகரும். இந்த மான்கள் உணவுக்காக கால்நடைகளுடன் போட்டியிடுவதில்லை என்ற கருத்துக்கான காரணங்கள் பலமாக உள்ளன. [16] பம்பாஸ் மான்கள் கால்நடைகள் வசிக்கும் பகுதிகளைத் தவிர்க்கின்றன. மேலும் கால்நடைகள் இல்லாதபோது இவை மிகப் பெரிய வாழிட எல்லைகளைக் கொண்டுள்ளன என்பதையும் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. [7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.