From Wikipedia, the free encyclopedia
பரூகாபாத் (Farrukhabad), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பரூகாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். பரூகாபாத் மாநகராட்சிப் பகுதியில் பதேகர் இராணுவப் பாசறை மன்றமும் உள்ளது. கங்கை ஆற்றின் கரையில் அமைந்த பரூகாபாத் நகரம், மாநிலத் தலைநகரானா லக்னோவிலிருந்து 170 கிலோ மீட்டர் தொலைவிலும்; தில்லியிலிருந்து 338 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
பரூக்காபாத் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 27.390°N 79.581°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | பரூகாபாத் |
நிறுவப்பட்ட ஆண்டு | 1714 |
தோற்றுவித்தவர் | முகமது கான் பங்கஷ் |
பெயர்ச்சூட்டு | பரூக்சியார் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,76,581 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 209625 |
தொலைபேசி குறியீடு எண் | 05692 |
வாகனப் பதிவு | UP-76 |
அருகமைந்த நகரங்கள் | பரேலி (120 கிமீ) கான்பூர் (130 கிமீ) ஆக்ரா (180 கிமீ) |
எழுத்தறிவு | 73.4% |
இணையதளம் | farrukhabad.nic.in |
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி பரூகாபாத் மாநகரத்தின் மக்கள் தொகை 2,76,581 ஆகும். அதில் 1,45,641 ஆண்கள் மற்றும் 1,30,940 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 899 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 73.44% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 74.23%, இசுலாமியர் 24.67%, கிறித்தவர்கள் 0.59% மற்றும் பிறர் 0.51% ஆகவுள்ளனர்.[2]
பரூகாபாத் சந்திப்பு இரயில் நிலையம்[3]நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.