From Wikipedia, the free encyclopedia
உயிரினங்களின் பெரும்பாலான இனங்கள் சார்ந்த உயிரிகள் ஆண்பால், பெண்பால் எனும் இரு பால் (sex) பகுப்புகளாகப் படிமலர்ந்துப் பிரிந்துள்ளன[1]. இவற்றில் சில உயிரிகள் இடைப்பட்ட நிலையில் ஊடுபாலினமாகவும் (intrersex) அமைதல் உண்டு. பால்வழி இனப்பெருக்கம் மரபுபேறாக பெற்றோரின் மரபியல் பண்புகளை சேர்த்துக் கலக்கவைக்கின்றது: சிறப்புவகை உயிர்க்கலங்களாகிய பாலணுக்கள் பெற்றோர் மரபியல் பண்புகளை மரபுபேறாக பெற்று புதிய இளவுயிரியைத் தோற்றுவிக்கின்றன. பாலணுக்கள்வடிவிலும் செயலிலும் ஒன்றி சமப்பாலணுக்களாகவும் அமையலாம். இது ஒருபால் முறைமை(isogamy) எனப்படுகிறது. என்றாலும் பல நேர்வுகளில், படிமலர்ச்சியின்போது சீரின்மை உருவாகி, இரு சிறப்புப் பால்வகைகளாகப் பிரிந்து அதாவது இருபாலணுக்களாகப் (heterogametes) பிரிகின்றன. இது சீரிலாபால் முறைமை (anisogamy) எனப்படுகிறது.
மாந்தர்களிலும் ஏனைய பாலூட்டிகளிலும், ஆண்கள் XY என்ற பாலினப் பண்பக இணையையும் XX பாலினப் பண்பக இணையையும் கொன்டிருக்கின்றன. இது XY பண்பகத்தால் பால் தீர்மானிக்கும் முறைமை ஆகும். வேறு சில விலங்குகளிலும் பூச்சிகளிலும்[2]. முறையே ZW பண்பகங்களாலும் XO பண்பகங்களாலும் பால் தீர்மானிக்கும் முறைமைகள் உள்ளன.
பால் பகுப்புகள் உயிரிகளின் பாலணுக்களினால் வரையறுக்கப்படுகின்றன. ஆண்பால் உயிரி விந்தணுக்களையும், பெண்பால் உயிரி அண்டங்கள் அல்லது சூல் முட்டைகளையும் உருவாக்குகின்றன. ஒரே உயிரினத்தின் உடலில் இரண்டு பாலுக்குரிய உயிரணுக்களும் உருவாகுமாயின் அவ்வுயிரினம் இருபால் உயிரி (hermaphroditic) எனப்படுகின்றது. பொதுவாக வெவ்வேறு பால்களைச் சேர்ந்த உயிரிகளின் உடல் தோற்றத்தில் குறிப்பிட்ட வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது பால்சார் இருநிலை வளர்ச்சி எனப்படுகின்றது. இவ் வேறுபாடு உயிரிகள் ஆட்படுகின்ற வேறுபாடான இனப்பெருக்கம் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடு ஆகும். எடுத்துகாட்டாக, இணைதேர்வும் பாலுறவுத்தேர்வும் இருபால்களுக்கும் இடையில் உள்ள புறத்தோற்ற வேறுபாடுகளின் படிமலர்ச்சியை முடுக்கிவிடலாம்.y
உயிரின் அடிப்படை இயல்புகளில் ஒன்று இனப்பெருக்கம் ஆகும் அதாவது புதிய இனத்தோன்றல்களை உருவாக்குவது ஆகும். இந்நிகழ்வில் பாலுறவு ஒரு கூறுபாடாகும். உயிர் தன் எளிய கட்டத்தில் இருந்து மேலும் சிக்கலான படிமலர்ந்தது போலவே. இனப்பெருக்க முறைமைகளும் எளிய நில்நியில் இருந்து சிக்கலான நிலைக்கு படிமலர்ந்தது. தொடக்கத்தில் இனப்பெருக்கம் வெறும் மீளுருவாக்கமாகவே நிலவியது. இந்நிகழ்வில் முதல் அல்லது பெற்றோர் உயிரியின் அதே மரபு இயல்புகள் அமைந்த புதிய இளவுயிரிகள் மீளுருவாக்கம் பெற்றன. இந்த முறைமை பாலிலா இனப்பெருக்கம் என வழங்கப்பட்டது. இது இன்னமும் பல உயிரின்ங்களில் குறிப்பாக ஓருயிர்க்கல உயிரிகளி நடைபெறுகிறது.என்றாலும் இது பல்லுயிர்க்கல உயிரிகளிலும் கூட பரவலாக இன்னமும் விளங்குகிறது.[3]> பாலியல் இனப்பெருக்கத்தில் இளவுயிரிகளின் மரபுத் தகவல் இருவேறு தனியர்களிடம் இருந்து பெறப்படுகிறது. பாலியல் இனப்பெருக்கம் படிமலர்ச்சியின் நெடிய வழித்தட நிகழ்வில் உருவாகியதால், இடைநிலை உயிரிகளும் நிலவுகின்றன. காட்டக, குச்சுயிரிகள் பாலிலா இனப்பெருக்கத்தைக் கடைப்பிடித்தாலும், கொடுக்கும் தனி உயிரியின் மரபுத் தகவல் பெறும் மற்றோர் உயிரிக்கு பரிமாற்றப்படுகிறது.[4]
இடைநிலை உயிரிகளை விட்டுவிட்டல் மற்றபடி பால் இனப்பெருக்கமும் பாலிலா இனப்பெருக்கமும் தான் இரண்டு அடிப்படைமுறைகளாக மரபுத் தகவல் மரபுபேறாக இளவுயிரிகளுக்குக் கடத்தப்படுகின்றன. வழக்கமாக, பாலிலா இனப்பெருக்கத்துக்கு முன் உயிர்க்கலம் தன் மரபுத் தகவல் உள்ளடக்கத்தை இரட்டிப்பாக்கிப் பிளவுறுகிறது. இது ஊன்பகுப்பு அல்லது முழுமைப் பகுப்பு எனப்படுகிறது. பாலியல் இனப்பெருக்கத்தில், சிறப்புவகை உயிர்க்கலங்கள் தம் மரபுத் தகவலை இரட்டிக்காமல் குன்றல் பகுப்பு முறையில் பிளவுற்று பாலணுக்களை விளைவிக்கின்றன. இப்பாலணுக்கள் பெற்றோர் ஒவ்வொருவரின் அரைப்பங்கு மரபுத் தகவலையும் பெற்றுள்ளன. இந்தப் பாலணுக்கள் தாம் உயிரியின் பாலியல் இனப்பெருக்கத்துக்கு ஆயத்தப்படுத்தும் உயிர்க்கலங்கள் ஆகும்.[5]> பாலுறுப்பு, இனப்பெருக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைப் பெற்றுள்ளது. இனப்பெருக்க அமைப்புடன் இது படிமலர்ந்த்து. இது முதலில் ஒத்த பாலணுக்களில் (ஒருபாலுறவில்) தொடங்கி, பெரிய பெண்பாலணுவான அண்டமும் சிறிய ஆண்பாலணுவான விந்தணுவும் உள்ளடங்கிய வேறுபட்ட பாலணு வகைகள் அமைந்த அமைப்புக்கு முன்னேறியது.[6]
சிக்கலான உயிரிகளில், இனப்பெருக்கத்திற்கான பாலணுக்களை பால் உறுப்புகள் தாம் உருவாக்கிப் பரிமாறுகின்றன. பல உயிரினங்கள், குறிப்பாக விலங்குகள், பாலியல் பிரிவைக் கொண்டுள்ளன. அவற்றின் இனக்குழுமல்கள் ஆண்களாகவும் பெண்களாகவும் பிரிந்துள்ளன. மாராக, இத்தகைய பால்பிரிவற்றனவாக உயிரினங்களும் நடப்பில் உள்லன. இவற்றின் ஒவ்வொரு தனியரும் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பெற்றுள்ளன. இவை இருபாலிகள் எனப்படுகின்றன. இந்நிலை நிலைத்திணைகளில் அடிக்கடி காணப்படுகிறது.[7]
ஒற்றைக்கருவன் முழுக்கருவன் மூதாதையில் முதலில் இனப்பெருக்கம் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிப் படிமலர்ந்த்து.[8] பால்பிரிவின் படிமலர்ச்சியும் அது இதுநாள் வரை நிலத்திருப்பதற்குமான காரணம் குறித்த விவாதங்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதற்கு பின்வரும் கோட்பாட்டு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன: பால் இளவுயிரிகளில் வேறுபாட்டை உருவாக்குகிறது; இது மேம்பட்ட பண்புகள் பரவ உதவுகிறது; து தீங்கான பண்புகளை நீக்க உதவுகிறது. பால் முளைக்கரு தொடர் மரபனைப் பழுதுபார்க்க உதவுகிறது.
இனப்பெருக்கம், முழுக்கருவன் உயிரிகளில் ந்அடக்கும் தனித்தன்மை வாய்ந்த நிகழ்வாகும். முழுக்கருவன் உயிரிகள் கலக்கருவையும் ஊன்குருத்தையும் கொண்டவையாகும். விலங்குகள், நிலைத்திணைகள், பூஞ்சைகள் தவிர, முகிழுயிரிகளாகிய மலேரியா ஒட்டுண்ணிகளைப் போன்றவையும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. சில குச்சுயிரிகளும் இணைசேர்க்கை வாயிலாக உயிர்க்கலங்களுக்கு இடையில் மரபுத் தகவலை கட்த்துகின்றன; இது இனப்பெருக்கத்தை ஒத்ததல்ல என்றாலும் இதுவும் பண்புகள் கலக்க உதவுகிறது.
முழுக்கருவன்களின் இனப்பெருக்க பான்மையை வரையறுப்பது பாலணுக்களின் வேறுபாடும் கருவுறலின் இருபால் தன்மையுமே ஆகும்.ஓர் உயிரினத்துக்குள் நிலவும் பாலணு வகைகளின் பன்மையும் கூட இனப்பெருக்கத்தின் ஒரு வடிவமாக்க் கருதப்படுகிறது. என்றாலும், பலௌயிர்க்கல விலங்குகளில் பாலணுவின் மூன்றாம் வகையேதும் அமைதல் இல்லை.[9][10][11]
பால்பிரிவினை முதுகருவன்களின் காலத்திலோ முழுக்கருவன்களின் தொடக்கக் காலத்திலோ தொன்றியிருக்க வாய்ப்பிருந்தாலும்,[12] பண்பக இணை பால்திர்மானிப்பின் தோற்றம் முழுக்கருவன்களின் தொடக்கக் காலத்திலேயே தோன்றிவிட வாய்ப்புள்ளது. ZW பால்தீர்மானிப்பை பரவைகளும் மீன்களும் சில ஓட்டுடலிகளும் பகிர்கின்றன. XY பால்தீர்மானிப்பு பாலூட்டிகளிலும்[13] மேலும் சில பூச்சிகளிலும்[14] நிலைத்திணைகளிலும் (Silene latifolia) அமைகிறது.[15] X0 பால்தீர்மானிப்பு சில பூச்சிகளில் அமைகிறது.
பறவைகளின் ZW, பாலூட்டிகளின் XY பண்பக இணைகளுக்கு இடையில் பொதுவான மரபன்கள் ஏதும் பகிரப்படவில்லை.[16] கோழியையும் மாந்தனையும் ஒப்பிட முன்னதன் Z பண்பகம் மாந்தனின் பால்சாரா 9 ஆம் பண்பகத்தை ஒத்துள்ளது. ஆனால், அது X அல்லது Y பண்பகத்தை ஒத்தில்லை. இந்நிலை ZW, XY பால்தீர்மானிப்புகள் பொது தோற்றத்தைப் பகிரவில்லை எனபதைத் தெளிவாக்குகிறது. ஆனால் இந்தப் பாலியல் பண்பகங்கள் பறவைகள், பாலூட்டிகளின் பொது மூதாதையின் பால்சாரா பண்பகத்தில் இருந்து தோன்றியிருக்கும் வாய்ப்பைக் காட்டுகிறது.
2004 ஆம் ஆண்டின் ஓர் ஆய்வுக் கட்டுரை கோழியின் Z பண்பகத்தை பிளாட்டிபசின் X பண்பகத்தோடு ஒப்பிட்டு இரண்டும் உறவுள்ள அமைப்புகளாக அமைதலைச் சுட்டிக் காட்டியுள்ளது.[17]
முழுக்கருவன்களின் இனப்பெருக்கம் இருபெற்றோரின் மரபியல் பண்புகளை கலந்து உயிரிகள், இளவுயிரிகளை உருவாக்கும் நிகழ்வாகும். இந்நிகழ்வில் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்குப் பண்பகங்கள் கட்த்தப்படுகின்றன. இளவுயிரியின் ஒவ்வோர் உயிக்கலத்திலும் இரு பெற்றோரின் அரைப்பகுதி பண்பகங்கள் அமைந்திருக்கும்.[18]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.