பிரசெல்சு வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
பிரசெல்சு வானூர்தி நிலையம் (Brussels Airport, (ஐஏடிஏ: BRU, ஐசிஏஓ: EBBR), இது பிரசெல்சு-நேசனல் / பிரக்செல்சு-நேசனல் , பிரசெல்-சாவெந்தெம் எனவும் அழைக்கப்படுகின்றது) பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சு நகரின் வடகிழக்கே 6 NM (11 km; 6.9 mi) தொலைவில்[3] அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். 2015இல் 23 மில்லியனுக்கும் மேலான பயணிகள் வந்தும் புறப்பட்டும் சென்றுள்ளனர். இது ஐரோப்பாவின் நெருக்கடிமிக்க வானூர்தி நிலையங்களில் 21ஆவது இடத்தில் உள்ளது. இது மாகெலென் புறநகர்ப் பகுதியில் பகுதி டையஜெம் பகுதியிலும் பகுதி சாவெந்தெம் பகுதியிலும் அமைந்துள்ளது.[4] மேலும் ஓர்பகுதி பிளெமிஷ் வட்டாரத்தின் இசுடீனோக்கெர்சீல் பகுதியில் உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 260 நிறுவனங்கள் அமைந்துள்ளன; இவற்றில் நேரடியாக 20,000 மக்கள் பணி புரிகின்றனர். பிரசெல்சு எயர்லைன்சு, ஜெட்ஏர்பிளை, தாமசுகுக் எயர்லைன்சு போன்ற வான்வழிக் கோக்குவரத்து நிறுவனங்களின் அச்சு மையமாக விளங்குகின்றது.
பிரசெல்சு வானூர்தி நிலையம் Luchthaven Brussel-Nationaal (டச்சு) Aéroport de Bruxelles-National (பிரெஞ்சு) | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது & படைத்துறை | ||||||||||||||||||
இயக்குனர் | பிரசெல்சு வானூர்திநிலைய நிறுவனம் | ||||||||||||||||||
சேவை புரிவது | பிரசெல்சு, பெல்ஜியம் | ||||||||||||||||||
அமைவிடம் | சாவெந்தெம், மாசெலென் மற்றும் இசுடீனோக்கெர்சீல் | ||||||||||||||||||
மையம் |
| ||||||||||||||||||
உயரம் AMSL | 184 ft / 56 m | ||||||||||||||||||
ஆள்கூறுகள் | 50°54′05″N 004°29′04″E | ||||||||||||||||||
இணையத்தளம் | www.brusselsairport.be | ||||||||||||||||||
நிலப்படங்கள் | |||||||||||||||||||
வானூர்திநிலைய விளக்கப்படம் | |||||||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||||||
| |||||||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2015) | |||||||||||||||||||
| |||||||||||||||||||
இந்நிலையத்தை இயக்கும் நிறுவனத்தின் பெயர் "பிரசெல்சு வானூர்திநிலைய நிறுவனம் என்.வி./எஸ்.ஏ." ஆகும்.அக்டோபர் 19, 2006க்கு முன்பாக இது பிரசெல்சு பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனம் என அழைக்கப்பட்டு வந்தது. 2011 முதல் இந்நிலையத்தின் உரிமையை ரொறன்ரோவின் ஒன்ராறியோ ஆசிரியர்கள் ஓய்வூதியத் திட்டம் (39%), மாக்குயரீ ஐரோப்பிய கட்டமைப்பு நிதியம் I மற்றும் மாக்குயரீ ஐரோப்பிய கட்டமைப்பு நிதியம் III (36%), பெல்ஜிய அரசு (25%) பெற்றுள்ளன.[5]