பிலிப்பீன்சு
தென்கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடு / From Wikipedia, the free encyclopedia
பிலிப்பீன்சு அல்லது பிலிப்பைன்ஸ் // (கேட்கⓘ); (ஆங்கிலம்: Philippines; பிலிப்பினோ: pɪlɪˈpinɐs, (Pilipinas); என்று அழைக்கப்படும் பிலிப்பீனியக் குடியரசு (Republika ng Pilipinas) தென்கிழக்காசியாவின் இறைமையுள்ள ஒரு தீவு நாடாகும். மேற்கு பசிபிக் பெருங்கடலின் எல்லையில் அமைந்துள்ளது.
பிலிப்பீனியக் குடியரசு Republic of the Philippines Republika ng Pilipinas | |
---|---|
குறிக்கோள்: "மக்கா-டியோஸ், மக்கா-டாவோ, மக்காகலிகசன் அட் மக்காபன்சா" கடவுளுக்கும், மக்களுக்கும், இயற்கைக்கும், நாட்டுக்கும் | |
நாட்டுப்பண்: லுபாங் ஹினிராங் (தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு) | |
பெரும் சின்னம் டாகிலாங் சகிசக் இங் பிலிப்பினாஸ் பிலிப்பீனியப் பெரும் சின்னம் | |
தலைநகரம் | மணிலாa |
பெரிய நகர் | குவிசோன் நகரம் 14°38′N 121°02′E |
ஆட்சி மொழி(கள்) | 1. பிலிப்பினோ 2. ஆங்கிலம் 3. (தகலாகு) |
பிராந்திய மொழிகள் | |
முக்கியமற்ற மொழிகள்a | |
இனக் குழுகள் (2014[2]) | |
சமயம் | கிறித்தவம், இசுலாம், பிலிப்பீனிய மதம், பௌத்தம் |
மக்கள் | பிலிப்பினோ (ஆண்) பிலிப்பினா (பெண்) பினோய் (பேச்சுவழக்கில் ஆண்) |
அரசாங்கம் | ஒன்றிய சனாதிபதி முறையைக் கொண்ட குடியரசு |
• அதிபர் | பொங்பொங் மார்க்கோசு (2022 ஜூன் 30-ஆம் தேதி தொடக்கம்) |
• துணை அதிபர் | சாரா துதெர்த்தே (2022 ஜூன் 30-ஆம் தேதி தொடக்கம்) |
• மேலவைத் தலைவர் | (காலியாக உள்ளது) |
• தலைமை நீதிபதி | அலெக்சாண்டர் கெசுமுன்டோ |
சட்டமன்றம் | காங்கிரஸ் |
• மேலவை | மேலவை |
• கீழவை | பிரதிநிதிகள் சபை |
சுதந்திரம் | |
12 சூன் 1898 | |
• சுய-அரசாங்கம் | 24 மார்ச் 1934 |
• ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து சுதந்திரம் | 4 சூலை 1946 |
2 பெப்ரவரி 1987 | |
பரப்பு | |
• மொத்தம் | 300,000 km2 (120,000 sq mi) (73 ஆவது) |
• நீர் (%) | 0.61[4] (உள்நாட்டு நீர்நிலைகள்) |
• நிலம் | 2,98,170 கி.மீ2 115,120 சதுர மைல் |
மக்கள் தொகை | |
• 2021 மதிப்பிடு | 109,991,095[5] (13-ஆவது) |
• 2020 கணக்கெடுப்பு | 109,035,343[6] |
• அடர்த்தி | 392.74/km2 (1,017.2/sq mi) (43 ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2021 மதிப்பீடு |
• மொத்தம் | $1.0 trillion[7] |
• தலைவிகிதம் | $9,061[7] (115-ஆவது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2021 மதிப்பீடு |
• மொத்தம் | $402.638 billion[7] (32nd) |
• தலைவிகிதம் | $3,646[7] (118th) |
ஜினி (2018) | 42.3[8] மத்திமம் · 44th |
மமேசு (2019) | 0.718[9] உயர் · 107-ஆவது |
நாணயம் | பெசோ (பிலிப்பினோ பிசோ) (₱) (PHP) |
நேர வலயம் | ஒ.அ.நே+8 (PST) |
ஒ.அ.நே+8 (பயன்பாட்டில் இல்லை ) | |
திகதி அமைப்பு |
|
வாகனம் செலுத்தல் | வலப்பக்கம்[10] |
அழைப்புக்குறி | +63 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | PH |
இணையக் குறி | .ph |
|
லூசோன் (Luzon), விசயாஸ் (Visayas) மற்றும் மின்டனாவு (Mindanao) எனப் பொதுவாக மூன்று முக்கியப் புவியியல் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்சு நாடு 7,641 தீவுகளைக் கொண்டுள்ளது. இதன் தலைநகரம் மணிலா (Manila); மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் குவிசோன் நகரம் (Quezon City). இவ்விரு நகரங்களும் மணிலா பெருநகரத்தின் (Metro Manila) பகுதிகளாகும்[13]
பிலிப்பீன்சின் எல்லைகளாக வடக்கே லூசோன் நீரிணைக்கு அப்பால் தாய்வான்; மேற்கே தென் சீனக் கடலுக்கு அப்பால் வியட்னாம் நாடுகளும்; தென்மேற்கே சுலு கடலுக்கு அப்பால் புரூணை தீவுகளும் உள்ளன. தெற்கே இந்தோனேசியாவின் தீவுகளில் இருந்து பிலிப்பீன்சைப் பிரிக்கும் செலிபிஸ் கடலும்; கிழக்கில் பிலிப்பைன்ஸ் கடலும்; பலாவு எனப்படும் ஒரு தீவு நாடும் உள்ளன.