பொட்டாசியம் பெராக்சிமோனோசல்பேட்டு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
பொட்டாசியம் பெராக்சிமோனோசல்பேட்டு (Potassium peroxymonosulfate) என்பது KHSO5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எம்.பி. எசு., பொட்டாசியம் மோனோபெர்சல்பேட்டு, பொட்டாசியம் கரோட்டு, மோனோ பொட்டாசியம் பெராக்சிமோனோசல்பேட்டு என்ற பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள், இவற்றை தவிர்த்து கரோட்டு மற்றும் ஆக்சோன், என்ற வர்த்தக பெயர்களும் இதை அடையாளப்படுத்துகின்றன. மற்றும் குளம் மற்றும் ஆரோக்கிய நீரூற்றுக் குளம் போன்ற பகுதிகளில் குளோரின் அல்லாத ஒரு நீர் துப்புரவாக்கியாக இது கருதப்படுகிறது [1][2][3]). ஆக்சிசனேற்ற முகவராக பரவலாகப் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் பெராக்சிமோனோசல்பேட்டு சேர்மத்தை பெராக்சி மோனோகந்தக அமிலத்தின் ஒரு பொட்டாசியம் உப்பு என்று கருதலாம்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் பெராக்சிமோனோசல்பேட்டு | |
வேறு பெயர்கள்
கரோட்டு ஆக்சோன் பொட்டாசியம் மோனோபெர்சல்பேட்டு எம்.பி.எசு | |
இனங்காட்டிகள் | |
10058-23-8 N 37222-66-5 N | |
ChemSpider | 8053100 N |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11804954 |
| |
UNII | 040ZB27861 N |
பண்புகள் | |
KHSO5 | |
வாய்ப்பாட்டு எடை | 152.2 கி/மோல் (614.76 மூவுப்பாக) |
தோற்றம் | அரை வெண்மை பொடி |
சிதைவடையும் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | ஆக்சிசனேற்றி, அரிக்கும் |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Degussa Caroat MSDS |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2KHSO 5 • KHSO 4 • K 2 SO 4 என்ற பகுதிக்கூறு உப்புகளால் ஆக்கப்படும் இந்த மூவுப்பு ஆக்சோன் என்ற வர்த்தகப் பெயரால் பரவலாக அறியப்படுகிறது. இது அதிக நிலைப்புத் தன்மையுடன் கூடிய ஒரு வடிவம் ஆகும் [4]. இந்த சேர்மத்திற்கான நிலையான மின்முனை திறன் +1.81 வோல்ட்டு ஆகும். இது ஐதரசன் சல்பேட்டை (pH = 0) உருவாக்கும் ஓர் அரை வினையாகும்.
- HSO5− + 2 H+ + 2 e− → HSO4− + H2O