மகோபா
மனிதக் குடியேற்றப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
மகோபா (Mahoba) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகோபா மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும்.[3] புந்தேல்கண்ட் பிராந்தியத்தில், கூர்ஜர-பிரதிகார பாணியில் கட்டப்பட்ட ஒன்பதாம் நூற்றாண்டு சூரியக் கோயிலுக்கு இந்நகரம் நன்கு அறியப்பட்டதாகும். இது கோகர் மலையில் உள்ள 24 பாறைகளால் வெட்டப்பட்ட சைனத் தீர்த்தங்கரர் சிலைக்கும் நன்கு அறியப்பட்ட இடமாகும்.[4] மகோபா கஜுராஹோ, இலவகுசா நகர் மற்றும் குல்பகார், சரகாரி, கலிஞ்சர் கோட்டை, ஓர்ச்சா மற்றும் ஜான்சி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு அதன் நெருக்கத்திற்காக அறியப்படுகிறது . இந்த நகரம் இருப்புப்பாதைப் போக்குவரத்து மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் மகோபா, நாடு ...
மகோபா | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25.28°N 79.872885°E / 25.28; 79.872885 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | மகோபா |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | மனோஜ் குமார் சௌகான் |
ஏற்றம் | 214 m (702 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 95,216 |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி[1] |
• கூடுதல் அலுவல் மொழி | உருது[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 210 427 |
தொலைபேசி இணைப்புக் குறியீடு | 91-5281 |
பாலின விகிதம் | 922 ♂/♀ |
கல்வியறிவு | 76.91%[2] |
இணையதளம் | www |
மூடு