மைக்கேல் பெனா
அமெரிக்க நடிகர் / From Wikipedia, the free encyclopedia
மைக்கேல் அந்தோனி பெனா (ஆங்கில மொழி: Michael Anthony Peña) (பிறப்பு: சனவரி 13, 1976)[1] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் கிராஷ் (2004), சுட்டர் (2007), டவர் ஹெயிஸ்ட் (2011), கேங்க்ஸ்டர் ஸ்குவாட், அமெரிக்கன் ஹஸ்ல் (2013), பியூரி (2014),[2] த மார்சன் (2015), போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.
விரைவான உண்மைகள் மைக்கேல் பெனா, பிறப்பு ...
மைக்கேல் பெனா | |
---|---|
பிறப்பு | மைக்கேல் அந்தோனி பெனா சனவரி 13, 1976 (1976-01-13) (அகவை 48) சிகாகோ, இலினொய், அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1994–இன்று வரை |
மூடு
இவர் 2015 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான ஆன்ட்-மேன்,[3] ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) போன்ற திரைப்படங்களில் 'லூயிசு' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.