லா எசுப்பானியோலா
From Wikipedia, the free encyclopedia
லா எசுப்பானியோலா அல்லது லா இஸ்பானியோலா அல்லது லா இச்பானியோலா ( La Española) என்பது கரீபியன் கடலில் உள்ள ஒரு முக்கியமான தீவு ஆகும். கியூபாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய தீவு. சுமார் 76,480 ச. கி. பரப்பளவுள்ள இந்த தீவில்தான் இலத்தீன் அமெரிக்க நாடுகளான எயிட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்த தீவை முதலில் கண்டுபிடித்த(1492 & 1493), ஐரோப்பிய பயணி கொலம்பசு ஆவார்.[4][5] அவர் 1492 ஆம் ஆண்டு இந்த தீவை கண்டுபிடித்ததை தொடர்ந்து இந்த தீவு எசுப்பானியர்களால் காலனியாக்கம் செய்யப்பட்டது. 1697 ஆம் ஆண்டு லா எசுப்பானியோலாவின் மேற்கு பகுதி (தற்போதைய எயிட்டி) பிரான்சியர்கள் வசம் சென்றது. இரண்டு நாடுகளை உள்ளடக்கியுள்ள இந்த தீவு கரீபியன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
La Española (எசுப்பானியம்) Hispaniola (பிரெச்சு) Ispanyola (ஐத்தி கிரியோல் மொழி) | |
---|---|
View from Hispaniola | |
புவியியல் | |
அமைவிடம் | கரிபியன் |
ஆள்கூறுகள் | 19°N 71°W |
தீவுக்கூட்டம் | கிரேட்டர் அன்டில்லெசு |
பரப்பளவு | 76,480 km2 (29,530 sq mi) |
பரப்பளவின்படி, தரவரிசை | 22nd |
கரையோரம் | 3,059 km (1,900.8 mi) |
உயர்ந்த ஏற்றம் | 3,175 m (10,417 ft)[1] |
உயர்ந்த புள்ளி | பிக்கோ டுவர்டே |
நிர்வாகம் | |
எயிட்டி | |
டொமினிக்கன்_குடியரசு | |
மக்கள் | |
மக்கள்தொகை | 18,943,000[2] (2005) |
அடர்த்தி | 241.5 /km2 (625.5 /sq mi) |
மூடு