விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு
From Wikipedia, the free encyclopedia
தமிழ் விக்கிபீடியாவின் கட்டுரைகள் நடுநிலை நோக்கோடு எழுதப்படவேண்டும். அதாவது அனைத்து முக்கிய பார்வைகளுக்கும் தகுந்த, நியாயமான இடம் தரப்பட வேண்டும். அந்தப் பார்வைகள் பக்கச்சார்பை வலியுறுத்தாமல் ஆதாரபூர்வமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும்.
இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும். |
தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள் |
---|
ஐந்து தூண்கள் |
தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம் |
நடுநிலை நோக்கு |
தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல் |
கண்ணியம் |
நடுநிலைமை விக்கிப்பீடியாவினதும், தமிழ் விக்கிப்பீடியாவினதும் ஆணிவேர்க் கொள்கைகளில் ஒன்று. இந்தக் கொள்கை, பல்வேறு பயனர்களின் பங்களிப்பை உள்வாங்கி் உள்வாங்கித் தமிழ் விக்கிப்பீடியாவின் குறிக்கோளான எளிய தமிழில், தரமான கலைக்களஞ்சியத்தை ஆக்குவதை ஏதுவாக்குகின்றது.