விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம்
From Wikipedia, the free encyclopedia
விடுதலைபெற்ற நாடுகளின் பொதுநலவாயம் உருசியம்: Содружество Независимых Государств, СНГ, ஒ.பெ Sodruzhestvo Nezavisimykh Gosudarstv, SNG) (உருசியப் பொதுநலவாயம் என்றும் அழைக்கப்படுகின்றது) என்பது முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகள் அடங்கிய ஒரு பிராந்திய அமைப்பு ஆகும்.
விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் (CIS) Содружество Независимых Государств (СНГ) Sodruzhestvo Nezavisimykh Gosudarstv (SNG) | |
---|---|
நிர்வாக மையம் | மின்ஸ்க் |
பெரிய நகர் | மாஸ்கோ |
வேலை செய்யும் மொழி | உருசிய மொழி |
அங்கத்துவம் | |
அரசாங்கம் | பொதுநலவாயம் |
• நிர்வாகச் செயலாளர் | உருசியா சேர்கெய் லெபெடேவ் |
• ஜனாதிபதி | |
உருவாக்கம் | 21 டிசம்பர் 1991 |
• கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கை அமைப்பு | 15 மே 1992 |
• சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (CISFTA) கையெழுத்திடப்பட்டது | 1994 |
• CISFTA நிறுவப்பட்டது | 2010 ஆம் ஆண்டின் இறுதியில் |
பரப்பு | |
• மொத்தம் | 22,100,843 km2 (8,533,183 sq mi) |
மக்கள் தொகை | |
• 2008 மதிப்பிடு | 276,917,629 |
• அடர்த்தி | 12.53/km2 (32.5/sq mi) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2007 மதிப்பீடு |
• மொத்தம் | $2,906.944 பில்லியன் |
• தலைவிகிதம் | $10,498 |
மொ.உ.உ. (பெயரளவு) | 2007 மதிப்பீடு |
• மொத்தம் | $1,691.861 பில்லியன் |
• தலைவிகிதம் | $6,110 |
நாணயம் | உறுதிசெய்யப்பட்டது
உறுதிசெய்யப்படாதது |
நேர வலயம் | ஒ.அ.நே+2 to +12 |
விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் அரசுகளின் ஒரு தளர்வான கூட்டமைப்பு ஆகும். இருப்பினும் விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயத்திற்கு நாட்டிற்கும் அப்பாற்பட்ட சில் அதிகாரங்கள் இருக்கின்றன. முற்றிலும் அடையாள அமைப்பாக இருப்பதற்கு மேலாக பெயரளவில் வைத்திருக்கும் ஒருங்கிணைக்கும் அதிகாரங்களை வர்த்தகம், நிதி, சட்டம் இயற்றல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் செயற்படுத்துவதே இக் கூட்டமைப்பின் நோக்கமாகும். இக் கூட்டமைப்பு எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பதற்கான ஒத்துழைப்பையும் வழங்குகின்றது. விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயத்தின் சில அங்கத்துவ நாடுகள் முழுமைபெற்ற பொதுச் சந்தையை உருவாக்கும் நோக்குடன் இயூரேசிய பொருளாதார சமூகத்தை நிறுவின.