விளாதிமிர் கோப்பென்
From Wikipedia, the free encyclopedia
விளாதிமிர் பீட்டர் கோப்பென் (Wladimir Peter Köppen, டாய்ச்சு ஒலிப்பு: [vlaˈdiːmiːɐ̯ ˈkœpn̩, ˈvlaːdimiːɐ̯ -]; உருசியம்: Влади́мир Петро́вич Кёппен, விளதீமிர் பெத்ரோவிச் கியோப்பென்; 25 செப்டம்பர் 1846 – 22 சூன் 1940) ஒரு உருசிய-செருமனிய புவியியலாளர், வானிலையியல் ஆய்வாளர், காலநிலை ஆய்வாளர் மற்றும் தாவரவியலாளர் ஆவார். சென் பீட்டர்ஸ்பேர்க்கில் படித்த பிறகு, அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதி வேலை மற்றும் வாழ்க்கையையும் செருமனி, ஆஸ்திரியாவில் கழித்தார். அறிவியலுக்கு அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பு கோப்பென் காலநிலை வகைப்பாடு முறையை உருவாக்கினார். இது சில மாற்றங்களுடன் இன்னும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] கோப்பன் அறிவியலின் பல கண்டுபிடிப்புகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
விரைவான உண்மைகள் விளாதிமிர் கோப்பென்Wladimir Köppen, பிறப்பு ...
விளாதிமிர் கோப்பென் Wladimir Köppen | |
---|---|
1921 இல் கோப்பென் | |
பிறப்பு | (1846-09-25)25 செப்டம்பர் 1846 சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியப் பேரரசு |
இறப்பு | 22 சூன் 1940(1940-06-22) (அகவை 93) கிராசு, நாட்சி ஜெர்மனி (இன்றைய ஆஸ்திரியாவில்)[1] |
தேசியம் | உருசியர்/செருமனியர் |
துறை | புவியியல், வானிலையியல், காலநிலையியல், தாவரவியல் |
பணியிடங்கள் | ஐடல்பேர்க் பல்கலைக்கழகம் லீப்சிக் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | சென் பீட்டர்சுபர்க் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | கோப்பென் காலநிலை வகைப்பாடு |
மூடு