ஹென்றி கவில்
From Wikipedia, the free encyclopedia
ஹென்றி வில்லியம் டால்கிலீஷ் கவில் (ஆங்கில மொழி: Henry William Dalgliesh Cavill) (பிறப்பு: 5 மே 1983) என்பவர் பிரித்தானிய நாட்டு நடிகர் ஆவார். இவர் 2002ம் ஆண்டு தி கவுன்ட் ஒப் மொண்டே கிறிஸ்டோ என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்படத்துறை வாழ்க்கையை ஆரம்பித்தார். அதை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட மீநாயகன் படங்களில் சூப்பர்மேனை[1][2] சித்தரித்து வெளியான மேன் ஆப் ஸ்டீல், பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016) ஜஸ்டிஸ் லீக் (2017)[3] மற்றும் சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021)[4][5] போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகர் ஆனார்.
விரைவான உண்மைகள் ஹென்றி கேவிஸ், பிறப்பு ...
ஹென்றி கேவிஸ் | |
---|---|
பிறப்பு | ஹென்றி வில்லியம் டால்கிலீஷ் கவில் 5 மே 1983 (1983-05-05) (அகவை 41) செயிண்ட் சேவியர், யேர்சி, கால்வாய் தீவுகள், ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | பிரித்தானியர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2001–இன்று வரை |
கையொப்பம் |
மூடு