1924 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த எட்டாவது ஒலிம்பிக் போட்டி / From Wikipedia, the free encyclopedia
1924 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (1924 Summer Olympics, பிரெஞ்சு மொழி: Les Jeux olympiques d'été de 1924), அலுவல்முறையாக எட்டாம் ஒலிம்பியாடு போட்டிகள், பிரான்சு நாட்டில் பாரிஸ் நகரில் 1924இல் நடத்தப்பட்ட பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். 1900 ஆண்டிற்குப் பின்னர் பாரிசு இரண்டாம் முறையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியது. 1924ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடத்துவதற்கு ஆறு ஆட்டக்கேள்விகள் வந்தன; ஆம்ஸ்டர்டம், பார்செலோனா, லாஸ் ஏஞ்சலஸ், பிராகா, உரோம் நகரங்களுக்கு எதிராக பாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1921இல் லோசானில் நடந்த 20வது ப.ஒ.கு அமர்வில் இத்தேர்வு நடந்தது.[1]
எட்டாம் ஒலிம்பியாடு நடத்தியதற்கான செலவு 10,000,000 பிரெஞ்சு பிராங்க் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் 60,000 பார்வையாளர்கள் வந்திருந்த போதிலும் 5,496,610 பிரெஞ்சு பிராங்க் வருமானமே இருந்ததால் இந்த ஒலிம்பிக் பெரும் நட்டமாக முடிந்தது. .[2]