2006 உலகக்கோப்பை காற்பந்து
From Wikipedia, the free encyclopedia
2006 உலகக்கோப்பை கால்பந்து அல்லது 2006 பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் ஜெர்மனியில் ஜூன் 9 முதல் ஜூலை 9 2006 வரை நடைபெற்றன. தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 198 அணிகளிலிருந்து 32 அணிகள் இறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இறுதிப் போட்டியில் இத்தாலி பிரான்சினைத் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது.
விரைவான உண்மைகள் 2006 FIFA World Cup - ஜெர்மனி FIFA Fußball-WeltmeisterschaftDeutschland 2006 ...
2006 FIFA World Cup - ஜெர்மனி FIFA Fußball-Weltmeisterschaft Deutschland 2006 | |
---|---|
அதிகாரப்பூர்வ சின்னம் | |
அணிகள் | 32 (தகுதிச் சுற்றில் பங்கேற்றவை): 198) |
இடம் | ஜெர்மனி |
நடைபெறும் ஆட்டங்கள் | 64 |
மூடு
ஜூன் 2000 -ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டிற்கு இப்போட்டியை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இவ்வுரிமைக்காக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ, பிரேசில் ஆகிய மற்ற நாடுகளும் போட்டியிட்டன.