இருவாய்ச்சி
பறவை குடும்பம் / From Wikipedia, the free encyclopedia
இருவாட்சி (ஒலிப்புⓘ) என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். ஆங்கிலத்தில் இக்குடும்பத்தை "ஹார்ன்பில்" என அழைப்பார்கள். "ஹார்ன்பில்" (Hornbill) என்பது ஒருவகையான மரம் ஆகும். இந்த மரத்தில் தான் இப்பறவை கூடுகட்டுகிறது. அதனால் இப்பறவைக்கு ஹார்ன்பில் என பெயர் சூட்டியுள்ளார்கள். [1] இவை அளவில் சற்று பெரிதானவை. பறக்கும்போது ஒரு உலங்கு வானூர்தி பறப்பதைப் போல இருக்கும். அதே போல ஒலி எழுப்பக்கூடியவை. பெரிய அலகை உடையது. அலகுக்கு மேலே கொண்டை (காஸ்க்) போன்ற அமைப்பு இருக்கும். இது பறவைக்கு இருவாய்கள் இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தரும். இவை சுமார் 30 முதல் 40 ஆண்டுகள் வாழக்கூடியது.
விரைவான உண்மைகள் இருவாட்சி, உயிரியல் வகைப்பாடு ...
இருவாட்சி | |
---|---|
மலபார் சாம்பல் இருவாச்சி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | கொர்டேட்டா |
வகுப்பு: | |
வரிசை: | கொரேசிஃபார்மல் |
குடும்பம்: | புசெரோடிடே Rafinesque, 1815 |
பேரினம் | |
14 |
மூடு