கார்போரண்டம் யுனிவர்சல்
முருகப்பா குழும நிறுவனம் / From Wikipedia, the free encyclopedia
கார்போரண்டம் யுனிவர்சல் லிமிடெட் (CUMI), இந்தியாவின் பெரிய மற்றும் பழமையான பெருநிறுவனங்களுள் ஒன்றான முருகப்பா குழும நிறுவனத்தின் ஒரு பகுதியாகும். இந்நிறுவனம் உராய்வுப் பொருட்கள், பீங்கான் பொருட்கள், மட்பாண்டங்கள், தீச்செங்கல் பொருள்கள், அலுமினிய ஆக்சைடு குருணை, இயந்திரக் கருவிகள், பலபடிகள், ஒட்டும் பசைகள் மற்றும் கனிமங்கள் ஆகியவற்றின் முன்னணி உற்பத்தியாளர் மற்றும் உருவாக்குநராக உள்ளது.
இந்நிறுவனம் இந்தியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, தாய்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது.