குசுத்தாவ் கிர்க்காஃப்
From Wikipedia, the free encyclopedia
குசுத்தாவ் ராபர்ட் கிர்க்காஃப் அல்லது குஸ்தாவ் ராபர்ட் கிர்க்காஃப் (Gustav Robert Kirchhoff (மாற்று ஒலிப்பு: குசுத்தாச் ராபர்ட் கிர்ச்சாஃப்), மார்ச் 12, 1824 - அக்டோபர் 17, 1887) என்பவர் செருமானிய (இடாய்ச்சுலாந்திய)இயற்பியலாளர். மின்சுற்றுக்கள், நிறமாலையியல், மற்றும் கரும்பொருள் கதிர்வீச்சல் போன்ற பல துறைகளில் இவரது பங்களிப்புகள் புகழ் பெற்றவை. 1862 ஆம் ஆண்டில் கரும்பொருள் கதிர்வீசல் குறித்து ஆய்வுகளை வெளியிட்டார். அத்துடன் மின்சுற்று மற்றும் வெப்பக் கதிர்வீசல் பற்றிய விதிகள் கிர்க்காஃபின் விதிகள் என இவரது நினைவாகப் பெயரிடப்பட்டன.
விரைவான உண்மைகள் குசுத்தாவ் ராபர்ட் கிர்க்காஃப்Gustav Robert Kirchhoff, பிறப்பு ...
குசுத்தாவ் ராபர்ட் கிர்க்காஃப் Gustav Robert Kirchhoff | |
---|---|
பிறப்பு | (1824-03-12)12 மார்ச்சு 1824 கோனிஸ்பேர்க், கிழக்கு புருசியா |
இறப்பு | 17 அக்டோபர் 1887(1887-10-17) (அகவை 63) பெர்லின், இடாய்ச்சுலாந்து |
வாழிடம் | இடாய்ச்சுலாந்து |
தேசியம் | செருமன் |
துறை | இயற்பியலாளர் |
பணியிடங்கள் | பெர்லின் பல்கலைக்கழகம் பிரெசிலாவு பல்கலைக்கழகம் ஐடல்பேர்க் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கோனிசுபேர்க் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | பிரான்சு ஏர்னெசுட்ச்ய் நியூமன் |
அறியப்படுவது | கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள் கிர்ச்சாஃபின் வெப்பக் கதிர்வீச்சல் விதி நிறமாலைக்கான கிர்க்காஃபின் விதிகள் |
விருதுகள் | ரம்ஃபோர்ட் விருது |
மூடு