ரிச்சர்டு பெயின்மான்
From Wikipedia, the free encyclopedia
ரிச்சர்டு ஃபெயின்மான் (Richard Feynman, 1918–1988) இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளர். குவாண்டம் விசையியலின் தொகையீட்டு சூத்திரம், குவாண்டம் மின்னியக்கவியலின் கோட்பாடு (quantum electrodynamics), அதிகுளிரவைக்கப்பட்ட ஹீலியத்தின் மீப்பாய்மத்தன்மைக்கான இயற்பியல் வரையறை, துகள் இயற்பியல் (துகள் மாதிரியை முன்மொழிந்தார்) போன்ற துறைகளில் தன் ஆராய்ச்சிகளின் மூலம் அறியப்படுபவர். குவாண்டம் மின்னியக்கவியலின் வளர்ச்சிக்கு ஃபெயின்மான், சூலியன் சிவிங்கர் (Julian Schwinger) மற்றும் சின்-இடிரோ டோமோநாகா (Sin-Itiro Tomonaga) ஆகியோருடன் சேர்ந்து பங்காற்றினார். எனவே ஃபெயின்மானுக்கு 1965ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அணு குண்டு தயாரித்த குழுவில் உறுப்பினராக இருந்தவர். துவக்க காலங்களில் குவாண்டம் விசையியல் கல்வி பெற்ற முதல் மாணவர்களில் ஒருவராக விளங்கியவர். பிற்காலத்தில் குவாண்டம் மின்னியக்கவியல் என்றத் துறையை நிறுவினார்.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
ரிச்சர்டு பெயின்மான் | |
---|---|
பிறப்பு | ரிச்சர்டு பிலிப்சு ஃபெயின்மான் (1918-05-11)மே 11, 1918 ஃபார் ராக்கவே, குயின்சு, நியூ யார்க், ஐ.அ. |
இறப்பு | பெப்ரவரி 15, 1988(1988-02-15) (அகவை 69) லாஸ் ஏஞ்சலெஸ், கலிபோர்னியா, ஐ.அ. |
வாழிடம் | ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | மன்ஹாட்டன் திட்டம் கார்னெல் பல்கலைக்கழகம் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம் (அறிவியல் இளங்கலை), பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (பிஎச்.டி.) |
ஆய்வு நெறியாளர் | ஜான் ஆர்ச்சிபால்டு வீலர் |
Other academic advisors | மானுவல் சண்டோவல் வல்லார்ட்டா |
முனைவர் பட்ட மாணவர்கள் | F. L. Vernon, Jr.[1] Willard H. Wells[1] Al Hibbs[1] George Zweig[1] Giovanni Rossi Lomanitz[1] Thomas Curtright[1] |
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள் | Douglas D. Osheroff Robert Barro W. Daniel Hillis |
அறியப்படுவது | ஃபெயின்மான் வரைபடங்கள் பெயின்மான் பாயின்ட் பெயின்மான்–காக் சூத்திரம் வீலர்–பெயின்மான் உட்கொள் கொள்கை பெத்–பெயின்மான் சூத்திரம் எயின்மான் தூவி பெயின்மான் நீள்வகுத்தல் புதிர்கள் ஹெல்மான்–பெயின்மான் தேற்றம்]] பெயின்மான் சாய்கோடு குறியீடு பெயின்மான் கூறளவுபடுத்தல்கள் ஸ்டிக்கி பீடு விவாதம் ஒரு இலத்திரன் பேரண்டம் குவாண்டம் செல்லுலர் ஆட்டோமேட்டா |
தாக்கம் செலுத்தியோர் | பவுல் திராக் |
விருதுகள் | ஆல்பர்ட் ஐன்சுடைன் விருது (1954) எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்ஸ் விருது (1962) இயற்பியலுக்கான நோபல் பரிசு (1965) ஊர்ஸ்டெட் பதக்கம்]] (1972) அறிவியலுக்கான தேசிய பதக்கம் (1979) |
துணைவர் | ஆர்லீன் கிரீன்பாம் (தி. 1941–1945) (இறப்பு)மேரி லூ பெல் (தி. 1952–1954) க்வெனத் ஹோவர்த் (தி. 1960–1988) (தன் இறப்புவரை) |
கையொப்பம் | |
குறிப்புகள் | |
கார்ல் பெயின்மானின் தந்தை மற்றும் மிசெல் பெயின்மானின் வளர்ப்புத் தந்தை. ஜோன் பெயின்மானின் உடன்பிறப்பும் கூட. |