வச்சிரயான பௌத்தம்
பெளத்த சமயப் பிரிவுகளுள் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
வச்சிரயான பௌத்தம் (சீனம்: 金剛乘, jingangcheng, சப்பானியம்: 金剛乗, kongōjō) என்பது மகாயான பௌத்தத்தின் ஒரு நீட்சியாக கருதப்படுகிறது. வஜ்ரயானம் தர்மத்தை அறிந்து கொள்ள பல கூடுதல் உபாயங்களை கையாள்கிறது. இதை தந்திரயானம், மந்திரயானம், என்ற பெயர்களிலும் அழைப்பர். வஜ்ரயானம் என்ற சொல் வழக்கத்தில் வருவதற்கு முன், புத்தகுஹ்யர் போன்ற பௌத்த அறிஞர்கள், மகாயானத்தை பாரமித-யானம், மந்திர-யானம் என இரு வகையாக பிரிக்கின்றனர்.தேரவாதம் மற்றும் மகாயானத்துக்கு அடுத்து மூன்றாவது பெரும் பிரிவாக வஜ்ரயான பௌத்தம் கருதப்படுகிறது.