அக்சராய் மாகாணம்
துருக்கியின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
அக்சராய் மாகாணம் (Aksaray Province துருக்கியம்: Aksaray ili ) என்பது மத்திய துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும் . இதன் அருகிலுள்ள மாகாணங்களாக மேற்கு மற்றும் தெற்கே கொண்யா, தென்கிழக்கில் நீட், கிழக்கே நெவஹிர் மற்றும் வடக்கே கோரேஹிர் ஆகியவை உளன. இதன் பரப்பளவு 7,626 சதுர கிலோமீட்டர்கள் (2,944 sq mi) ஆகும். மாகாண தலைநகராக அக்சராய் நகரம் உள்ளது.
அக்சராய் மாகாணம்
Aksaray ili | |
---|---|
துருக்கியில் அக்சராய் மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | துருக்கி |
பகுதி | நடு அனத்தோலியா |
துணைப் பகுதி | கோரக்கலே |
அரசு | |
• தேர்தல் மாவட்டம் | அக்சராய் |
• ஆளுநர் | ஹம்ஸா அய்டோஸ்டு |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,626 km2 (2,944 sq mi) |
Area code | 0382 |
வாகனப் பதிவு | 68 |
கப்படோசியா பகுதியில் உள்ள நான்கு மாகாணங்களில் அக்சராய் ஒன்றாகும், இதனுடன் நெவஹிர், நீடே மற்றும் கெய்சேரி ஆகிய மாகாணங்கள் உள்ளன. மேலும் 3,000-மீட்டர் (9,843 அடி) உயரமுள்ள எரிமலையான ஹசன் மலை அக்சராய் மற்றும் நீடே ஆகியவற்றுக்கு இடையே நிற்கிறது. சமவெளியில் கோடை காலம் வெப்பமாகவும், வறண்டதாகவும் இருக்கும், ஆனால் மலைப்பகுதியில் இருந்து நீர் ஓடிவரும் போது வசந்த காலத்தில் இப்பகுதி பசுமையானதாகவும் பூக்கள் பூத்துக் குலுங்குவதாகவும் இருக்கும். மாகாண எல்லைக்குள் 2,400 மீ² (0.59 ஏக்கர்) பரப்பளவுள்ள உவர் ஏரியான துஸ் கோலே ஏரி அமைந்துள்ளது, இது பெரிய அளவிலான சதுப்பு நிலத்தைக் கொண்டுள்ளது. இந்த ஏரி அதிகபட்சம் ஒரு மீட்டர் (3 அடி 3 அங்குலம்) ஆழம் கொண்டது.