அசவாத் (Azawad, அரபு மொழி: أزواد) என்பது வடக்கு ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவனம், மற்றும் சாகெல் வலயத்தை ஒட்டிய பிரதேசத்தைக் குறிக்கும். இப்பிராந்தியத்தில் மாலியின் திம்பக்து, கிடால், காவோ, மற்றும் மோப்தி ஆகிய மாகாணங்கள் அடங்குகின்றன[4]. அசவாத் பகுதிக்கு தன்னாட்சி கோரி அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம் என்ற போராளிக் குழு மாலி அரசுடன் போரிட்டு வருகிறது.

Thumb
அசவாத் பகுதியின் வரைபடம்.
விரைவான உண்மைகள் அசவாத்Independent State of Azawadدولة أزواد المستقلةⴰⵣⴰⵓⴷÉtat indépendant de l'Azawad, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...
அசவாத்
Independent State of Azawad
دولة أزواد المستقلة
ⴰⵣⴰⵓⴷ[1]
État indépendant de l'Azawad
Thumb
கொடி
Thumb
அசவாத் பச்சையில், மாலியின் இதர பகுதிகள் இளம் பச்சையில்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
காவோ
பேசும் மொழிகள்துவாரெக், அரபு, சொங்காய், ஃபுலா மொழி, பம்பாரா மொழி, பிரெஞ்சு
மக்கள்அசவாதி
அரசாங்கம்இடைக்கால அரசு
 பொதுச் செயலாளர்
பிலால் அக் அச்செரிஃப்
விடுதலை 
மாலி இடமிருந்து (அறிவிப்பு, எந்த நாடுகளும் அங்கீகரிக்கவில்லை)
 பிரகடனம்
6 ஏப்ரல் 2012[2][3]
 அங்கீகாரம்
அங்கீகரிக்கப்படவில்லை
நேர வலயம்ஒ.அ.நே+0 (GMT)
 கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+0 (not observed)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி223
மூடு

அசவாத் பகுதியில் துவாரெக் இனத்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இப்பகுதியில் எண்ணெய் வளம், மற்றும் யுரேனியம் உட்படக் கனிம வளம் அதிகமாக உள்ளது[5].

சொற்பிறப்பு

மேற்கு நைஜர், வடகிழக்கு மாலி, தெற்கு அல்ஜீரியா ஆகிய பகுதிகளில் உள்ள ஆற்று வடுநிலமான அசவாக் என்ற பெர்பர் மொழிச் சொல்லில் இருந்து அசவாத் என்ற பெயர் மருவியுள்ளது[6].

மாலியின் ஆட்சி

1962-64, 1990-1995, 2007-2009 ஆகிய காலப்பகுதிகளில் மாலியின் ஆட்சிக்கு எதிராக பல கிளர்ச்சிகள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. 2012 ஆம் ஆண்டில் அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம் அங்கார் தைன் என்ற இசுலாமியப் புரட்சியாளர்களுடன் இணைந்து போரிட்டு வருகிறது.

மாலி அரசு அசவாத் பகுதியைத் தன்னாட்சிப் பிராந்தியமாக அறிவிக்கும் வரையில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும் என அறிவித்து 2012 சனவரி 17 இல் அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம் போரை அறிவித்தது[7].

2012 மார்ச் மாதத்தில் மாலியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியைத்[8] தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட போராளிகள் மார்ச் 31 ஆம் நாள் கிடால் என்ற முக்கிய பாலைவன நகரையும்[9][10], காவோ நகரையும்[11] இராணுவ நிலைகளுடன் சேர்த்துக் கைப்பற்றினர். ஏப்ரல் 1 இல் வரலாற்றுப் புகழ் மிக்க திம்பக்து நகரையும் கைப்பற்றினர்[12]. அசவாத் பகுதியின் பெரும் பகுதியைக் கைப்பற்றிய போராளிகள் எப்ரல் 6 ஆம் நாள் அதனைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி[13], இராணுவ நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதாக அறிவித்தனர்[14][15].

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.