அசிட்டால்டிகைடு
வேதியல் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
அசிட்டால்டிகைடு (Acetaldehyde) (முறையான பெயர் எத்தனால்) என்பது CH3 CHO என்ற குறியீட்டைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும், சில சமயங்களில் வேதியியல் நிபுணர்களால் MeCHO (Me = methyl) என சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது. சர்க்கரை வகைகள் ஆல்க்கால்களாக நொதிக்கும்பொழுது அசிட்டால்டிகைடு உடன் வினைபொருளாக உண்டாகிறது. எனவே நொதித்த திரவத்தில் இது அசிட்டால் வடிவத்தில் காணப்படுகிறது. பிராணிகளின் உயிரணுக்களில் நடக்கும் கார்போஹைடிரேட்டு வளிர்சிதை மாற்றத்தில் இந்த ஆல்டிஹைடும் கலந்து கொள்கிறது என்று கருதப்படுகிறது. சில சமயங்களில் இது சிறுநீரிலும் காணப்படுவதுண்டு.
| |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அசிட்டால்டிகைடு[1] | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
எத்தனால்[1] | |||
வேறு பெயர்கள் | |||
இனங்காட்டிகள் | |||
75-07-0 Y | |||
ChEBI | CHEBI:15343 Y | ||
ChEMBL | ChEMBL170365 Y | ||
ChemSpider | 172 Y | ||
EC number | 200-836-8 | ||
IUPHAR/BPS |
6277 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
KEGG | C00084 Y | ||
பப்கெம் | 177 | ||
வே.ந.வி.ப எண் | AB1925000 | ||
| |||
UNII | GO1N1ZPR3B Y | ||
பண்புகள் | |||
C2H4O | |||
வாய்ப்பாட்டு எடை | 44.05 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
மணம் | காரமான | ||
அடர்த்தி | 0.784 g·cm−3 (20 °C) [4]
0.7904–0.7928 g·cm−3 (10 °C)[4] | ||
உருகுநிலை | −123.37 °C (−190.07 °F; 149.78 K) | ||
கொதிநிலை | 20.2 °C (68.4 °F; 293.3 K) | ||
உடன் கலக்கும் | |||
கரைதிறன் | எத்தனால், ஈதர், பென்சீன், தொலுயீன், சைலீன், டர்பெண்டைன், அசிட்டோன் ஆகியவற்றுடன் கலக்கக்கூடியது குளோரோஃபார்மில் சிறிது கரையக்கூடியது | ||
மட. P | -0.34 | ||
ஆவியமுக்கம் | 740 mmHg (20 °C)[5] | ||
காடித்தன்மை எண் (pKa) | 13.57 (25 °C, H2O)[6] | ||
-.5153−6 cm3/g | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.3316 | ||
பிசுக்குமை | 0.21 mPa-s at 20 °C (0.253 mPa-s at 9.5 °C) [7] | ||
கட்டமைப்பு | |||
மூலக்கூறு வடிவம் | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 2.7 D | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−166 kJ·mol−1 | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
250 J·mol−1·K−1 | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | சாத்தியமான தொழில்சார் புற்றுநோய்கள்[8] | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | HMDB | ||
GHS pictograms | [9] | ||
H224, H319, H335, H351[9] | |||
P210, P261, P281, P305+351+338[9] | |||
தீப்பற்றும் வெப்பநிலை | −39.00 °C; −38.20 °F; 234.15 K | ||
Autoignition temperature |
175.00 °C; 347.00 °F; 448.15 K[5] | ||
வெடிபொருள் வரம்புகள் | 4.0–60% | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
1930 mg/kg (rat, oral) | ||
LC50 (Median concentration) |
13,000 ppm (rat), 17,000 ppm (hamster), 20,000 ppm (rat)[8] | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு |
200 ppm (360 mg/m3)[5] | ||
உடனடி அபாயம் |
2000 ppm[5][8] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தொழில் முறையில் அசிட்டால்டிகைடு இருமுறைகளில் தயாரிக்கப்படுகிறது. காற்றின் முன்னிலையிலோ அல்லது அதில்லாமலோ செம்பு வெள்ளி முதலிய சில உலோகங்களை ஊக்கிகளாகக் கொண்டு எதில்ஆல்ககாலுக்கு ஐடிரஜனை ஏற்றி இதைத் தயாரிக்கலாம். இரச உப்புக்களின் உதவியால் அசிட்டிலீன் தண்ணீரைக் கிரகிக்குமாறு செய்து இதைத் தயாரிக்கலாம்.
அசிட்டால்டிகைடு காரமான மணமுடைய திரவம் (கொதிநிலை 21). இது தண்ணீரில் எளிதில் கரைகிறது. இது எளிதில் கூட்டுறுப்பாகும் தன்மையுடையது. ஈரமற்ற ஆல்டிஹைடுக்கு ஒரு சொட்டு அடர் கந்தகாமிலத்தைச் சேர்த்தால் அது உடனே கொதிக்கத் தொடங்கி 124 கொதிநிலையுள்ள பாரால்டிஹைடு என்ற பெயருடைய கூட்டுறுப்பியாக (CH3 CHO)3 மாறுகிறது. குறைந்த வெப்ப நிலைகளில் மெட்டால்டிஹைடு என்ற திண்மக் கூட்டுறுப்பி உண்டாகிறது.
இவற்றை நீர்த்த கந்தகாமிலத்துடன் கொதிக்க வைத்து எளிதில் அசிட்டால்டிகைடாக மாற்றலாம். பாரால்டிஹைடு ஒரு தூக்க மருந்தாகவும், மெட்டால்டிஹைடு ஒரு திட எரி பொருளாகவும் பயன்பட்டு வந்தன. அசிட்டால்டிகைடிலிருந்து செயற்கை இரப்பர், அசிட்டிக அமிலம், அசிட்டோன் போன்ற பல கரிமப் பொருள்கள் தயாரிக்கப்படுவதால் தொழில் முறையில் இது மிகவும் முக்கியமானது.[10]