அன்னா (புதிய ஏற்பாட்டு நபர்)
From Wikipedia, the free encyclopedia
அன்னா (எபிரேயம்: חַנָּה, பண்டைக் கிரேக்கம்: Ἄννα) அல்லது இறைவாக்கினரான அன்னா என்பவர் விவிலியத்தின் லூக்கா நற்செய்தியில் மட்டும் வரும் நபர் ஆவார். அன்நற்செய்தியின் படி இவர் வயது முதிர்ந்த இறைவாக்கினர். யூத வழக்கப்படி குழந்தை இயேசு ஆலயத்தில் அர்ப்பணிக்கப்பட்ட போது இவர் அங்கு வந்து குழந்தையைப்பற்றிப் பேசினார். இந்நிகழ்வு லூக்கா 2:36-38இல் விவரிக்கப்பட்டுள்ளது.