அப்பலாச்சியன் தடம்
From Wikipedia, the free encyclopedia
அப்பலாச்சியன் தடம் (Appalachian Trail) என்பது கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள குறிப்பிடத்தக்க காட்டு வழி நெடுந்தூர நடைபாதை மற்றும் மலையேற்றப் பாதை ஆகும். இப்பாதை ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஸ்பிரிங்கர் மலையில் இருந்து நியூஇங்கிலாந்தில் உள்ள காதடின் மலை வரை நீண்டு கிடக்கிறது.[2] இதன் நீளம் தோராயமாக 3,510 கி.மீ ஆகும். இத்தடத்தின் பெரும்பகுதி காட்டுக்குள் இருந்த போதிலும் சிறுபகுதி நகரங்கள், சாலைகள் மற்றும் ஆறுகளால் குறுக்கிடப்படுகிறது.
விரைவான உண்மைகள் அப்பலாச்சியன் தடம், தொடங்குமிடம் & முடியுமிடம் ...
அப்பலாச்சியன் தடம் | |
---|---|
வரைபடம் | |
தொடங்குமிடம் & முடியுமிடம் | ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஸ்பிரிங்கர் மலை, நியூஇங்கிலாந்தில் உள்ள காதடின் மலை |
பயன்பாடு | நெடுந்தூர நடை |
உயர வேறுபாடு | 515,000 அடி (156,972 m)[1] |
உயரமான இடம் | கிளிங்மேன்ஸ் முகடு,6643 அடி |
தாழ்வான இடம் | ஹட்சன் ஆறு,124 அடி |
கடினநிலை | நடுத்தரம் முதல் மிகக்கடினம் |
பருவகாலம் | வசந்த காலம் முதல் இலையுதிர் காலம் வரை |
காணுமிடங்கள் | அப்பலாச்சியன் மலைகள் |
ஆபத்துகள் | கடும் காலநிலை அமெரிக்கக் கருங்கரடி உண்ணி மூலம் வரும் நோய்கள்- கொசுக்கடி மற்றும் அதனால் வரும் நோய்கள் நச்சுப்பாம்புகள் நச்சுத் தாவரங்கள் வயிற்றுப் போக்கு |
மூடு
அப்பலாச்சியன் தடத்தைப் பலர் கடந்துள்ளனர். இதைக் குறித்து எண்ணற்ற புத்தகங்கள், வலைத்தளங்கள் உள்ளதுடன் இத்தடத்திற்கான இரசிகர் மன்றங்களும் பல உள்ளன.
இத்தடத்தை அமெரிக்க அரசின் தேசிய பூங்கா சேவையும் அப்பலாச்சியன் தட பாதுகாப்பு அமைப்பு எனும் வணிக நோக்கற்ற அமைப்பும் பராமரிக்கின்றன.[3][4][4]