அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு
From Wikipedia, the free encyclopedia
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு (Confederate States of America) அல்லது கூட்டமைப்பு, கூட்டமைப்பு நாடுகள், சிஎஸ்ஏ (CSA) எனப் பலவாறாக அழைக்கப்பட்ட இது, 1861 க்கும் 1865 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் பதினொரு தென் மாநிலங்கள் கூடி அமைத்த ஒரு கூட்டமைப்பு ஆகும். எனினும் இது பிற நாடுகளாலோ அல்லது அனைத்துலகச் சட்டங்களினாலோ ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தால், இது எப்போதும் ஒரு முறையான விடுதலை பெற்ற அரசாக இருந்தது இல்லை.
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு Confederate States of America | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1861–1865 | |||||||||
குறிக்கோள்: Deo Vindice (இலத்தீன்: Under God, Our Vindicator) | |||||||||
நாட்டுப்பண்: (அதிகாரபூர்வமாகக் கிடையாது) "தெற்கை இறைவன் காப்பார்" (அதிகாரபூர்வம் அல்லாதது) "The Bonnie Blue Flag" (அதிகாரபூர்வம் அல்லாதது) "Dixie" (அதிகாரபூர்வம் அல்லாதது) | |||||||||
நிலை | கூட்டமைப்பு | ||||||||
தலைநகரம் | மொண்ட்கொமரி, அலபாமா (மே 29 1861 வரை) ரிச்மண்ட், வெர்ஜீனியா (மே 29 1861–ஏப்ரல் 2 1865) டான்விலி, வெர்ஜீனியா (ஏப்ரல் 3 1865 தொடக்கம்) | ||||||||
பெரிய நகர் | நியூ ஓர்லீன்ஸ் (4 பெப்ரவரி 1861–மே 1 1862) (பிடிபட்டது) ரிச்மண்ட் (மே1 1862–சரண்) | ||||||||
பேசப்படும் மொழிகள் | ஆங்கிலம் (de facto) | ||||||||
அரசாங்கம் | குடியரசு | ||||||||
அதிபர் | |||||||||
துணை அதிபர் | |||||||||
சட்டமன்றம் | அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் காங்கிரஸ் | ||||||||
வரலாற்று சகாப்தம் | அமெரிக்க உள்நாட்டுப் போர் | ||||||||
• கூட்டமைப்பு உருவானது | பெப்ரவரி 4, 1861 1861 | ||||||||
• உள்நாட்டுப்போர் தொடக்கம் | ஏப்ரல் 12, 1861 | ||||||||
• படைகள் சரண் | ஏப்ரல் 11, 1865 1865 | ||||||||
பரப்பு | |||||||||
18601 | 1,995,392 km2 (770,425 sq mi) | ||||||||
மக்கள் தொகை | |||||||||
• 18601 | 9103332 | ||||||||
• அடிமைகள்² | 3521110 | ||||||||
நாணயம் | சிஎஸ்ஏ டாலர் (தாள்கள் மட்டும்) | ||||||||
| |||||||||
1Area and population values do not include Missouri & Kentucky nor the Territory of Arizona. Water area:5.7% ²Slaves included in above population count. 1860 Census |
ஆபிரகாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபராகப் பதவியேற்கும் முன்னர், நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த ஏழு மாநிலங்கள் தாங்கள் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து பிரிவதான அறிவிப்பை வெளியிட்டன. உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர் மேலும் நான்கு மாநிலங்கள் இவற்றுடன் இணைந்து கொண்டன. எனினும், ஐக்கிய அமெரிக்கா பிரிவினையைச் சட்டமுறையற்றதாகக் கொண்டதுடன் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவும் மறுத்துவிட்டது. பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் போர்க்கப்பல்களையும் பிற தளவாடங்களையும் விற்றன எனினும், எந்த ஐரோப்பிய நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.
தளபதிகளான ராபர்ட் ஈ. லீ, ஜோசேப் ஜான்ஸ்டன் ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியளவில் சரணடைந்துவிட்டன.