அலோரின் சாச்
சிந்து தேச அரசர் / From Wikipedia, the free encyclopedia
சாச் (Chach of Alor) (கி பி 631-711) (சிந்தி மொழி: چچ)[1] கி பி ஏழாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து சிந்துப் பகுதிகளை ஆண்ட பிராமண அரச குலத்தைச் சேர்ந்த மன்னராவார்.
விரைவான உண்மைகள் அலோரின் சாச், சிந்துவின் மன்னர் ...
அலோரின் சாச் | |
---|---|
சிந்துவின் மன்னர் | |
ஆட்சிக்காலம் | 631-711 |
முன்னையவர் | இராய் சகாசி (சிங்கசேனர்) |
பின்னையவர் | சந்திரன் |
குழந்தைகளின் பெயர்கள் | இராஜா தாகீர் |
மரபு | பிராமண அரச குலம் |
மதம் | இந்து சமயம் |
மூடு
சிந்துவின் முன்னாள் மன்னர் இரண்டாம் இராய் சகாசியின் அரசவையில் முதலமைச்சராக இருந்த பிராமண குல சாச் என்ற பிராமணர், இராய் சகாசியின் மரணத்திற்குப் பின் தன்னை சிந்துவின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.[1] பின்னர் மன்னரின் விதவை மனைவியை சாஜ் மன்னர் மணந்து கொண்டு பிராமண அரசசாட்சியை விரிவு படுத்தினார். இவரது வரலாறு, சாச் நாமா (Chach Nama) எனும் பாரசீக மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது.