அல்கான்
From Wikipedia, the free encyclopedia
அல்கான் (Alcon) என்பது அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்திலுள்ள வொர்த் கோட்டை நகரத்தில் அமைந்துள்ள கண்நலப் பொருட்கள் தயாரிக்கும் ஓர் உலகாய நிறுவனமாகும். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டின் பிரிபோர்க்கு நகரத்திலும், அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்திலுள்ள வொர்த் கோட்டையிலும் இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அல்கான் நோவார்ட்டீசு என்ற பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு கிளை நிறுவனமாகவே இருந்தது.
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | அமெரிக்கா, டெக்சாசு, வொர்த் கோட்டை (1945) |
தலைமையகம் | வொர்த் கோட்டை, USA[1] |
முதன்மை நபர்கள் | டேவிட் எண்டிகாட் (சி.இ.ஓ) |
தொழில்துறை | கண்ணியல் |
உற்பத்திகள் | அறுவை சிகிச்சை உபகரணங்கள் விழி உள்வில்லைகள் விற்பனை மருந்துகள் |
வருமானம் | ▲ $7.1 பில்லியன் அமெரிக்க டாலர் (2018) [2] |
பணியாளர் | 20,000+ (2017) |
இணையத்தளம் | www |
மூடு