அல்போர்சு மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
அல்போர்சு மாகாணம் (Alborz Province) (பாரசீக மொழி: Ostāne Alborz, Ostan-e Alborz ) என்பது ஈரான் நாட்டினுடைய, 31 மாகாணங்களில் அடங்கும் ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம், கரஜ் என்ற நகரமாகும்.[2] ஜூன் 23, 2010 அன்று ஈரான் பாராளுமன்றம் அளித்த ஒப்புதலுக்குப் பிறகு, தெகுரான் மாகாணத்தை இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு, இந்த மாகாணம் உருவாக்கப்பட்டது.[2] 2014 ஆம் ஆண்டு ஈரானின் பகுதிகளில் ஒன்றாக, ஈரான் பகுதி-1 என அறிவிக்கப் பட்டது.[3]தெகுரான் நகருக்கு, வடமேற்கே அமைந்துள்ள, இந்த மாகாணத்தில் 6 மாவட்டங்கள் உள்ளன, கராஜ் கவுண்டி, சவோஜ்போலாக் கவுண்டி, தலேகான் கவுண்டி, எஷ்டேஹார்ட் கவுண்டி, ஃபார்டிஸ் கவுண்டி, நாசராபாத் கவுண்டி ஆகிய ஆறு பெயர்கள், இம்மாகாணத்தின், ஆறு உள் மாவட்டங்கள் ஆகும்.[4]தெhdரான் நகரிலிருந்து, மேற்கே 35 கி.மீ. தொலைவில், அல்போர்ஸ் மலைத்தொடர் உள்ளது. இந்த மலைத்தொடரின் அடிவாரத்தில், இந்த மாகாணம் அமைந்துள்ளது. ஈரானின் முப்பத்தொறு மாகாணங்களிலேயே இந்த மாகாணம் தான்,மிகச்சிறிய மாகாணமாகும். ஈரான் நாட்டின் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2011 ஆம் ஆண்டில் அல்போர்சு மாகாணத்தின் மக்கள் தொகை 2,412,513 ஆக இருந்தது. இம்மக்கள் தொகையில், 90,5% மக்கள், இம்மாகாணத்தின் நகர்ப்புறங்களில் வசித்து வந்தனர்.[5]
அல்போர்சு மாகாணம்
Ostāne Alborz | |
---|---|
Location of Alborz within Iran | |
ஆள்கூறுகள்: 35.48°N 50.58°E / 35.48; 50.58 | |
உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்) | ஈரான் |
Regions of Iran | Regions of Iran |
தலைநகரம் | கரஜ் |
Counties of Iran | 6 |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,833 km2 (2,252 sq mi) |
மக்கள்தொகை (2016)[1] | |
• மொத்தம் | 27,12,400 |
• அடர்த்தி | 470/km2 (1,200/sq mi) |
நேர வலயம் | ஒசநே+03:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+04:30 (IRDT) |
Area code | 026 |
Languages of Iran | பாரசீக மொழி |
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
2011 | 24,12,513 | — |
2016 | 27,12,400 | +12.4% |
amar.org.ir |