ஆண்ட்ரோஸ்
கிரேக்கத் தீவு / From Wikipedia, the free encyclopedia
ஆண்ட்ரோஸ் (Andros, கிரேக்கம்: Άνδρος ) என்பது கிரேக்க சைக்லேட்ஸ் தீவுக்கூட்டத்தின் வடக்கே உள்ள தீவு ஆகும். இது யூபோயாவிற்கு தென்கிழக்கே சுமார் 10 கிமீ (6 மைல்) மற்றும் டினோசுக்கு வடக்கே சுமார் 3 கிமீ (2 மைல்) தொலைவில் உள்ளது. இது கிட்டத்தட்ட 40 கிமீ (25 மைல்) நீளம் கொண்டது, மேலும் இதன் அதிகப்பட்ச அகலம் 16 கிமீ (10 மைல்) ஆகும். இதன் பெரும்பகுதி மலைப்பாங்கானது, பல பழங்கள் விளையக்கூடிய, நன்கு நீர் பாசணம் வசதி கொண்ட பள்ளத்தாக்குகள் கொண்டது. [1] ஆண்ட்ரோஸ் தீவு மற்றும் பல மக்கள் வசிக்காத சிறிய தீவுகளை உள்ளடக்கிய நகராட்சியானது, 380 km2 (146.719 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது.[2] இதில் பெரிய நகரங்கள் ஆண்ட்ரோஸ் (நகரம்), கவ்ரியோ, பாட்ஸி மற்றும் ஓர்மோஸ் கோர்தியோ ஆகும்.
ஆண்ட்ரோஸ்
Περιφερειακή ενότητα / Δήμος Άνδρου | |
---|---|
பிராந்திய அலகு | |
தெற்கு ஏஜியனில் ஆண்ட்ரோசின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 37°50′11″N 24°53′53″E | |
நாடு | கிரேக்கம் |
பிராந்தியம் | தெற்கு ஏஜியன் |
தலைநகரம் | ஆண்ட்ரோஸ் (நகரம்) |
பரப்பளவு | |
• மொத்தம் | 380 km2 (150 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 9,221 |
• அடர்த்தி | 24/km2 (63/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 845 xx |
தொலைபேசிக் குறியீடு | 22820 |
வாகனப் பதிவுக் குறியீடு | EM |
இணையதளம் | www |
தீவின் பழங்காலத் தலைநகரான பேலியோபோலிஸ், செங்குத்தான மலைப்பகுதியில் கட்டப்பட்டது. மேலும் இதன் துறைமுகமான பிரேக்வாட்டர் இன்னும் நீருக்கடியில் காணப்படுகிறது. அபோகியா கிராமத்தில், சாரிசாவின் குறிப்பிடத்தக்க நீரூற்று உள்ளது, அங்கு கல்லால் செதுக்கப்பட்ட சிங்கத்தின் தலையிலிருந்து தண்ணீர் பாய்கிறது.