From Wikipedia, the free encyclopedia
ஆர்சனிக் முப்புரோமைடு (Arsenic tribromide ) என்பது AsBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இந்த பட்டைக்கூம்பு மூலக்கூறு மட்டுமே அறியப்பட்டுள்ள இருபடி ஆர்சனிக் புரோமைடு சேர்மமாகும். மிகவுயர் ஓளிவிலகல், தோராயமாக 2.3 பெற்றிருப்பதாலும், உயர் எதிர்காந்த ஏற்புத்திறன் கொண்டிருப்பதாலும்[1] AsBr3 மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. நிறமற்றதாகவும் நீர் ஈர்க்கும் படிகங்களாகவும் காணப்படுகின்ற இச்சேர்மம் ஈரமான காற்றில் புகையும் தன்மை கொண்டிருக்கிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Arsenic tribromide | |
முறையான ஐயூபிஏசி பெயர்
டிரைபுரோமோ ஆர்சேன் | |
வேறு பெயர்கள்
ஆர்சனிக்(III) புரோமைடு ஆர்சனசு புரோமைடு | |
இனங்காட்டிகள் | |
7784-33-0 | |
ChemSpider | 22973 |
EC number | 232-057-4 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24569 |
வே.ந.வி.ப எண் | CG1375000 |
| |
பண்புகள் | |
AsBr3 | |
வாய்ப்பாட்டு எடை | 314.634 கி/மோல் |
தோற்றம் | வெண்மையும் வெளி மஞ்சளும் கலந்த படிகத் திடப்பொருள் |
அடர்த்தி | 3.54 கி/செ.மீ3 |
உருகுநிலை | 31.1 °C (88.0 °F; 304.2 K) |
கொதிநிலை | 221 °C (430 °F; 494 K) |
சிதைவடையும் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 2.3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆர்சனிக் தூளை நேரடியாக புரோமினேற்றம் செய்வதன் மூலமாக ஆர்சனிக் முப்புரோமைடு தயாரிக்கலாம். தனிமநிலை கந்தகத்தின் முன்னிலையில் ஆர்சனிக்(III) ஆக்சைடை முன்னோடியாகக் கொண்டும் மாற்று வழியாகவும் இதைத் தயாரிக்கலாம்:[2]
ஆர்சனிக்கை ஒத்த பாசுபரசின் ஐம்புரோமைடு நன்கு அறியப்பட்டிருந்தாலும் ஆர்சனிக்கின் ஐம்புரோமைடு எதுவும் அறியப்படவில்லை. மீ இணைதிறன் புரோமோ ஆர்சனேட்டு எதிரயனி வகைச் சேர்மங்களின் வரிசை [As2Br8]2−, [As2Br9]3−, மற்றும் [As3Br12]3− என்ற வரிசை ஆர்சனிக் முப்புரோமைடில் இருந்தே தொடங்குகின்றன.[3]
கரிம ஆர்சனிக் புரோமைடுகளான (CH3)2AsBr மற்றும் (CH3)AsBr2 போன்றவை , தாமிர வினையூக்கியின் முன்னிலையில் சூடான ஆர்சனிக் உலோகத்துடன் மெத்தில் புரோமைடு சேர்த்து வினைப்படுத்துவதால் உருவாகின்றன. இத்தயாரிப்பு முறையானது நேரடிச் செயல்முறையில் மெத்தில் குளோரோசிலேன் தயாரிக்கும் முறையை ஒத்திருக்கிறது.
பொதுவாக ஆர்சனிக் சேர்மங்கள் அனைத்தும் நச்சுத்தன்மை கொண்டவை என்பதால் ஆர்சனிக் முப்புரோமைடும் ஒரு நச்சாகவே இருக்கிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.