![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/76/Ngorongoro-1001-2.jpg/640px-Ngorongoro-1001-2.jpg&w=640&q=50)
இங்கொரொங்கோரோ பாதுகாப்புப் பகுதி
பாதுகாக்கப்பட்ட பகுதி / From Wikipedia, the free encyclopedia
இங்கொரொங்கோரோ பாதுகாப்புப் பகுதி (Ngorongoro Conservation Area) (UK: /(ə)ŋˌɡɔːrəŋˈɡɔːroʊ/,[3] US: /ɛŋˌɡɔːroʊŋˈɡɔːroʊ, əŋˌɡoʊrɔːŋˈɡoʊroʊ/[4]}}</ref>) தான்சானியாவின் கிண்ணக்குழி உயர்நிலப் பகுதியில் உள்ள அரூசாவுக்கு மேற்கே 180 km (110 mi) தொலைவில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியும், உலக பாரம்பரியக் களமும் ஆகும். இந்தப் பகுதியின் பெயர்ஈந்தப் பகுதியில் இருக்கும் பெரிய எரிமலை வாயான இங்கொரொங்கோரோ கிண்ணக்குழியின் பெயரைத் தழுவியது. இந்தப் பாதுகாப்புப் பகுதியை, தான்சானிய அரசாங்கத்தின் ஒரு நிறுவனமான இங்கொரொங்கோரோ பாதுகாப்புப் பகுதி அதிகாரசபை நிர்வாகம் செய்கின்றது. இதன் எல்லைகள் அரூசா பிரதேசத்தின் இங்கொரொங்கோரோ பிரிவின் எல்லைகளோடு பொருந்துகின்றது.
இங்கொரொங்கோரோ பாதுகாப்புப் பகுதி | |
---|---|
![]() கிண்ணக்குழியின் தோற்றம் | |
அமைவிடம் | அருசாப் பிரதேசம், தான்சானியா |
ஆள்கூறுகள் | 3°12′S 35°27′E |
பரப்பளவு | 8,292 km2 (3,202 sq mi)[1] |
நிறுவப்பட்டது | 1959 |
வருகையாளர்கள் | Over 500,000 per year[2] |
நிருவாக அமைப்பு | தான்சானியா தேசியப் பூங்கா அதிகாரசபை |
வகை | இயற்கை |
வரன்முறை | (iv)(vii)(viii)(ix)(x) |
தெரியப்பட்டது | 1979 (3வது அமர்வு) |
உசாவு எண் | 39 |
அரச தரப்பு | தான்சானியா |
பிரதேசம் | ஆப்பிரிக்கா |
அழிவை எதிர்நோக்கியது | 1984–1989 |
2009 ஆம் ஆண்டின் இங்கொரொங்கோரோ காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் இப்பகுதியில் மனித குடியிருப்புக்களுக்கும், வாழ்வாதார வேளாண்மைக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், மசாய் மேய்ப்பர்கள் இப்பகுதியில் இருந்து வேறிடம் பெயரவேண்டி ஏற்பட்டது. இவற்களிற் பலர், 1959 இல் பிரித்தானியக் குடியேற்றவாத அரசாங்கம் செரங்கெட்டி தேசியப் பூங்காவை உருவாக்கியபோது, அவர்களுடைய முன்னோர் நிலங்களிலிருந்து இங்கொரொங்கோரோவுக்கு இடம் பெயர்ந்தவர்களாவர்.[5][6]